பாடல் #38832
இஸ்ரவேல் மகிழ்ந்து பாடிடு
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
இஸ்ரவேல் மகிழ்ந்து பாடிடு சீயோனே தேவனை புகழ்ந்திடு முழு உள்ளத்தோடே துதித்திடு கெம்பீரத்தோடே மகிழ்ந்திடு (2) தள்ளிவிட்டார் உன் தண்டனையை அகற்றிவிட்டார் நம் பாவங்களை வந்து விட்டார் நம் நடுவினிலே தந்து விட்டார் தூய வாழ்வினையே நீதியின் சால்வை நமக்கு தந்து இரட்சிப்பினாலே அலங்கரித்தார் நீதிமான்களாய் மாற்றப்பட்டு தூய்மையாக வாழ்ந்திடுவோம் மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட மாளிகை நாம் தேவன் தங்கும் ஆலயமாய் வாசஞ் செய்யும் இடமாவோம் இலாபமான அனைத்தையுமே நஷ்டமாக கருதுகிறேன் கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் களிகூர்ந்து நாம் மகிழ்ந்திடுவோம்.