பாடல் #38826
இது தேவன் தங்கிடும் வாசஸ்தலம்
🔤 Ithu Devan Thangkitum Vaasasthalam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இது தேவன் தங்கிடும் வாசஸ்தலம் இதில் தேவனை துதிக்க கூடிடுவோம் முழங்காலில் நின்று துதித்திடுவோம் - என்றும் முழுமனதோடே வாழ்த்திடுவோம் இத்தனை (ஐம்பது) ஆண்டுகள் கண்மணி போலே பத்திரமாய் நம்மை காத்தாரே உத்தம தேவ சமூகத்திலே நாம். நித்தமும் கூடி தொழுதிடுவோம் எத்தனை அற்புதம் இங்கு கண்டோம் - இன்று அத்தனை எஸ்தோத்திரம் ஏறெடுப்போம் சத்திய வேதத்தின்படி நடந்து நாம் நித்திய தேவனை தினம் துதிப்போம் தேவன் தாம் செய்த நன்மையை நினைத்து இரட்சிப்பின் தேவனை தொழுது கொள்வேன் ஆராதனையில் கலந்து கொண்டு நான் அபிஷேகத்தால் நிறைந்திடுவேன் நானிருப்பேன் உங்கள் நடுவிலென்றீர் - இன்று நாதன் உன் நாமம் நமஸ்கரிப்போம் தாமதமின்றி அருள்புரிவீர் என்றும் தற்பரனே உம்மை வாழ்த்துகிறோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithu Devan Thangkitum Vaasasthalam Ithil Devanai Thuthikka Kootituvom Muzhangkaalil Ninru Thuthitthituvom - Enrum Muzhumanathotae Vaazhtthituvom Itthanai (aimbathu) Aantugal Kanmani Polae Patthiramaay Nammai Kaatthaarae Utthama Thaeva Samoogatthilae Naam. Nitthamum Kooti Thozhuthituvom Etthanai Arpudham Ingku Kantom - Inru Atthanai Esthotthiram Aeretuppom Satthiya Vaedhatthinbati Natanthu Naam Nitthiya Devanai Thinam Thuthippom Devan Thaam Seytha Nanmaiyai Ninaitthu Iratsippin Devanai Thozhuthu Kolvaen Aaraadhanaiyil Kalanthu Kontu Naan Apishaegatthaal Nirainthituvaen Naaniruppaen Unggal Natuvilenreer - Inru Naadhan Un Naamam Namaskarippom Thaamathaminri Arulpuriveer Enrum Tharparanae Ummai Vaazhtthukirom.