பாடல் #38824
இயேசு அழைக்கிறார் கரம் நீட்டி
🔤 Yesu Azhaikkiraar Karam Neetti
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு அழைக்கிறார் கரம் நீட்டி அழைக்கிறார் அன்போடே அழைக்கிறார் உன்னை இன்றே அழைக்கிறார் யார் உன்னை கைவிட்டாலும் இந்த உலகம்வெறுத்திட்டாலும் மாறாத நேசர் இயேசு இந்த மண்ணில் உயர்த்துவார் சோர்வு வரும் வேளை பெலன் தந்து தாங்குவாரே கார்மேகம் வரும் நேரம் கருத்துடன் காப்பாரே கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணி போல் உன்னை காப்பார் விண்ணின் மைந்தன் இயேசு தூய பொன்னகர் கொண்டு சேர்ப்பார் விசுவாசம் உனக்கு இருந்தால் மலை சிதறி ஓடிப் போகும் வெற்றி வேந்தர் இன்ப இயேசு உன்னை முற்றிலும் நடத்துவார் தாவீதரசன் போலே வெற்றி வாழ்க்கை வாழ்ந்து காட்டு தாயைப் போலே தேற்றி தவறாமல் நடத்துவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Azhaikkiraar Karam Neetti Azhaikkiraar Anpotae Azhaikkiraar Unnai Inrae Azhaikkiraar Yaar Unnai Kaivittaalum Indha Ulakamverutthittaalum Maaraadha Naesar Yesu Indha Mannil Uyartthuvaar Sorvu Varum Vaelai Pelan Thanthu Thaangkuvaarae Kaarmaegam Varum Naeram Karutthudan Kaappaarae Kanneerellaam Thutaippaar Kanmani Pol Unnai Kaappaar Vinnin Maindhan Yesu Thooya Ponnakar Kontu Saerppaar Visuvaasam Unakku Irunthaal Malai Sidhari Otip Pokum Verri Vaendhar Inba Yesu Unnai Murrilum Natatthuvaar Thaaveedharasan Polae Verri Vaazhkkai Vaazhnthu Kaattu Thaayaip Polae Thaerri Thavaraamal Natatthuvaar.