பாடல் #38823
என்னை ஆசீர்வதித்தாலொழிய
🔤 Ennai Aaseervathitthaalozhiya
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடுவதில்லை உம் கிருபை தந்தாலொழிய உம்பாதம் விடுவதில்லை. கண்மணி போல் காக்கும் தெய்வம் நீரே காருணீயத்தால் மறைத்து வைத்தவர் நீரே மரண பள்ள தாக்கிலும் நான் கடந்து வந்த போதிலும் பயமில்லாமல் பாதுகாத்தவர் நீரே பாதம் கல்லில் இடறிடாமலே தூதர்களால் ஏந்தி கொண்டீரே நேசித்து என்னை போஷித்து வழி நடத்தி வந்ததாலே பாசத்தோடு துதித்திடுவேன். தாயைப் போல தேற்றும் தெய்வம் நீரே தந்தையைப் போல் சுமந்த தகப்பன் நீரே பிள்ளையென்ற அதிகாரத்தால் இல்லையென்று சொல்லிடாமல் அள்ளி தந்து வாழ வைத்தவர் நீரே ஊரெங்கும் சுற்றி செல்லுவேன் உம்நாமம் சொல்லி மகிழுவேன் பாரெங்கும் உந்தன் புகழை பறைசாற்றி வென்றிடுவேன் பரலோகம் தருவேன் என்றவர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aaseervathitthaalozhiya Ummai Pogavituvathillai Um Kirupai Thanthaalozhiya Umpaadham Vituvathillai. Kanmani Pol Kaakkum Theyvam Neerae Kaaruneeyatthaal Maraitthu Vaitthavar Neerae Marana Palla Thaakkilum Naan Katanthu Vandha Pothilum Payamillaamal Paathukaatthavar Neerae Paadham Kallil Idaritaamalae Thoodharkalaal Aenthi Konteerae Naesitthu Ennai Poshitthu Vazhi Natatthi Vandhathaalae Paasatthotu Thuthitthituvaen. Thaayaip Pola Thaerrum Theyvam Neerae Thanthaiyaip Pol Sumandha Thakappan Neerae Pillaiyendra Athikaaratthaal Illaiyenru Sollitaamal Alli Thanthu Vaazha Vaitthavar Neerae Oorengkum Surri Selluvaen Umnaamam Solli Makizhuvaen Paarengkum Undhan Pugazhai Paraisaarri Venrituvaen Paralogam Tharuvaen Endravar Neerae