பாடல் #38821
எந்தன் நாவு புது கவியாலே
🔤 Endhan Naavu Puthu Kaviyaalae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் நாவு புது கவியாலே பொங்க என் இயேசுவைப் பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம் அவரையே நேசிக்கிறேன் கடந்த ஆண்டில் கண்மணிபோல கருத்தாய் காத்தாரே புதிய ஆண்டையும் காணச் செய்து தம் கிருபையால் நிரைதார் ஆண்டுகள் தோறும் அவர் எனக்கு அளித்த வாக்கு மாறிடாதே இத்தனை ஆண்டுகள் நடத்திய கர்த்தர் இனியும் நடத்திடுவார் கர்த்தர் இவ்வாண்டில் என்னை உயர்த்தி நிமிர்ந்து நடக்கச் செய்வார் கர்த்தரின் வாக்கை நம்புகிறேன் நான் எக்காலம் சோர்வடையேன் சென்ற காலம் முழுவதும் காத்தார் சேதம் அணுகாமல் வருஷத்தை நன்மையால் முடிசூட்டி என்றும் அடைக்கலம் தந்தாரே நியமித்த ஓட்டத்தில் பொறுமையோடே நான் ஓடி ஜெயமெடுப்பேன் இறுதி வரையில் சாட்சியோடு நான் கர்த்தர் முன் நின்றிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Naavu Puthu Kaviyaalae Pongga En Yesuvaip Paatituvaen Avar Naamam Oorrunda Parimalathailam Avaraiyae Naesikkiraen Katandha Aantil Kanmanipola Karutthaay Kaatthaarae Puthiya Aantaiyum Kaanach Seythu Tham Kirupaiyaal Niraithaar Aantugal Thorum Avar Enakku Alittha Vaakku Maaritaathae Itthanai Aantugal Natatthiya Kartthar Iniyum Natatthituvaar Kartthar Ivvaantil Ennai Uyartthi Nimirnthu Natakkach Seyvaar Karttharin Vaakkai Nampukiraen Naan Ekkaalam Sorvataiyaen Sendra Kaalam Muzhuvathum Kaatthaar Saedham Anukaamal Varushatthai Nanmaiyaal Mutisootti Enrum Ataikkalam Thanthaarae Niyamittha Ottatthil Porumaiyotae Naan Oti Jeyametuppaen Iruthi Varaiyil Saatsiyotu Naan Kartthar Mun Ninrituvaen