பாடல் #38818
யார் என்னை மறந்தாலும்
🔤 Yaar Ennai Maranthaalum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யார் என்னை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை இயேசுவே இரட்சகா நீரே எந்தன் நம்பிக்கை நெருக்கத்திலே நான் உம்மை அழைத்தேன் நெருங்கி என் குரல் கேட்டீர் அருகில் வந்து என்னை அணைத்துக் கொண்டு விடுதலை தந்து விட்டீர் உம்மில் பெலன் கொண்டு வளர்ந்திடுவேன் உம்மையே பற்றிக் கொள்வேன் ஓடினாலும் நான் இளைப்படையேன் நடந்தாலும் சோர்வடையேன் எதிரிகளுக்கு முன் விருந்தொன்று ஆயத்தம் செய்து வைத்து என் தலையை நீர் எண்ணையினால் அபிஷேகம் செய்து விட்டீர் ஆத்துமாவை தினம் தேற்றுகிறீர் ஆனந்தத்தால் நிறைத்தீர் உயிரோடிருந்து நான் உலகத்திற்கு உம்மை பறை சாற்றுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaar Ennai Maranthaalum Neer Ennai Marappathillai Yesuvae Iratsakaa Neerae Endhan Nampikkai Nerukkatthilae Naan Ummai Azhaitthaen Nerungki En Kural Kaetteer Arukil Vanthu Ennai Anaitthuk Kontu Vitudhalai Thanthu Vitteer Ummil Pelan Kontu Valarnthituvaen Ummaiyae Parrik Kolvaen Otinaalum Naan Ilaippataiyaen Natanthaalum Sorvataiyaen Ethirigalukku Mun Virunthonru Aayattham Seythu Vaitthu En Thalaiyai Neer Ennaiyinaal Apishaegam Seythu Vitteer Aatthumaavai Thinam Thaerrukireer Aanandhatthaal Niraittheer Uyirotirunthu Naan Ulakatthirku Ummai Parai Saarruvaen