பாடல் #38817
நான் ஆராதிப்பதற்கு
🔤 Naan Aaraathippatharku
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆராதிப்பதற்கு ஒரு காரணம் உண்டு கைதட்டி பாடுவற்கு ஒரு காரணம் உண்டு என் இயேசு என்னை மாற்றினார் நான் முற்றிலும் சுத்தமானேன் வானாதி வானங்கள் கொள்ளாதவர் ஏனோ என் இதயத்தை தேடி வந்தார் வீணான சிந்தனையை வெறுத்த போது தேனாக இனிக்குதே அவர் சமூகம் வியாதிகள் என்னை வந்து தொடர்ந்த போதும் வாழ்வே இல்லையென்று கலங்கும் போதும் எந்நாளும் இயேசு என்னோடே இருந்து விசுவாசம் விலகாமல் காத்துக் கொண்டார் தாழ்மையில் என்னை அவர் உயர்த்தி வைத்தார் தனிமையில் என்னோடே நடந்து வந்தார் உயர்த்தப்படும் போதும் துதித்திடுவேன் நான் தாழ்த்தப்படும் போதும் துதித்திடுவேன் இரட்சித்த பின் வந்த சிட்சைகளில் பட்சமாய் என்னை அவர் நடத்தினாரே ஆட்சி செய்ய என்னை அழைக்கும் நேரம் சாட்சியாய் அவர் முன்னே நிற்பேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aaraathippatharku Oru Kaaranam Untu Kaidhatti Paatuvarku Oru Kaaranam Untu En Yesu Ennai Maarrinaar Naan Murrilum Sutthamaanaen Vaanaathi Vaananggal Kollaadhavar Aeno En Idhayatthai Thaeti Vanthaar Veenaana Sindhanaiyai Veruttha Pothu Thaenaaga Inikkuthae Avar Samoogam Viyaathigal Ennai Vanthu Thodarndha Pothum Vaazhvae Illaiyenru Kalangkum Pothum Ennaalum Yesu Ennotae Irunthu Visuvaasam Vilakaamal Kaatthuk Kontaar Thaazhmaiyil Ennai Avar Uyartthi Vaitthaar Thanimaiyil Ennotae Natanthu Vanthaar Uyartthappatum Pothum Thuthitthituvaen Naan Thaazhtthappatum Pothum Thuthitthituvaen Iratsittha Pin Vandha Sitsaigalil Patsamaay Ennai Avar Natatthinaarae Aatsi Seyya Ennai Azhaikkum Naeram Saatsiyaay Avar Munnae Nirpaenae