பாடல் #388
ஆண்டவா மோட்சகதி
🔤 Aandavaa Motsakathi
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவா மோட்சகதி நாயனே மீண்டவா பாவிக் கிரங்கையனே நீண்ட ஆயுளுள்ளவா நெறிமறை கொடுத்தவா தாண்டி உலகில் வந்தாயே தயாளமுள்ள யேசுவே பெத்தலேக மூரிலே பிள்ளையாய்ப் பிறந்தாயே சித்தம் வைத்திரங்கமாட்டாயோ தேவசீல மைந்தனே பாவியான மனுஷி உன் பாதமுத்தி செய்திட ஜீவவாக்குரைக்கவில்லையோ தேற்றல் செய்யும் மீட்பரே பேதலித்த சீமோனைப் பேணி முகம் பார்த்தாயே ஆதரவுநீ தான் அல்லவோ அருமையுள்ள அப்பனே கொல்கொதா மலையிலே குருசினில் தொங்கையிலே பொல்லாருக்கிரங்கவில்லையோ பொறுமையுள்ள தேவனே பாவவினை தீர்க்கவே பாடு மிகப் பட்டாயே கோபமின்றி என்னை நோக்காயோ குருசில் அறையுண்டவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavaa Motsakathi Naayanae Meendavaa Paavik Kirangkaiyanae Neenda Aayulullavaa Nerimarai Kotutthavaa Thaanti Ulakil Vanthaayae Thayaalamulla Yaesuvae Petthalaega Moorilae Pillaiyaayp Piranthaayae Sittham Vaitthiranggamaattaayo Thaevaseela Maindhanae Paaviyaana Manushi Un Paadhamutthi Seythida Jeevavaakkuraikkavillaiyo Thaertral Seyyum Meetparae Paedhalittha Seemonaip Paeni Mugam Paartthaayae Aadharavunee Thaan Allavo Arumaiyulla Appanae Kolkothaa Malaiyilae Kurusinil Thongkaiyilae Pollaarukkiranggavillaiyo Porumaiyulla Devanae Paavavinai Theerkkavae Paatu Migap Pattaayae Kobaminri Ennai Nokkaayo Kurusil Araiyundavaa