பாடல் #38797
எருசலேமே இசைவிணைப்பான நகரமே
🔤 Erusalaemae Isaivinaippaana Nakaramae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எருசலேமே இசைவிணைப்பான நகரமே சியோனே தூய்மையான பக்தரின் புகலிடமே பட்டணத்து வீதியெல்லாம் சுத்த பொன்னாமே பாடுவோரும் ஆடுவோரும் கோடாகோடியே பரமன் இயேசுவின் அன்பைப் பாடியே பளிங்குநதி கரைகளுக்கு பறந்து செல்வோமே மாட்சிமிகு மோட்ச நகர் மகிமையானதே - அங்கே மங்களமாய் மாளிகையில் சேர்ந்து கொள்வேனே மாயலோகத்தை விட்டு செல்வேனே மகிபனோடே சேர்ந்து நானும் ஆட்சி செய்வேனே நாமெல்லாரும் நாடுகின்ற பட்டணமது - அங்கே நாதனேசு வீற்றிருக்கும் நல்ல நாடது நானும் செல்லுவேன் என் அப்பா வீட்டிற்கு காலகாலம் கர்த்தரோடு பாடி மகிழ்வேனே இராஜ்ஜியத்தின் மூலைக்கல்லாய் இயேசு இருக்கிறார் நானிலத்தில் எங்கும் அவர் ஒளி வீசுதே ஒரே நகரமாய் ஒரே குடும்பமாய் இணைக்கப்பட்ட ஆலயமாய் எழும்பி நிற்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Erusalaemae Isaivinaippaana Nakaramae Siyonae Thooymaiyaana Paktharin Pugalidamae Pattanatthu Veethiyellaam Suttha Ponnaamae Paatuvorum Aatuvorum Kotaakotiyae Paraman Yesuvin Anpaip Paatiyae Palingkunathi Karaigalukku Paranthu Selvomae Maatsimiku Motsa Nakar Makimaiyaanathae - Angkae Manggalamaay Maalikaiyil Saernthu Kolvaenae Maayalogatthai Vittu Selvaenae Makibanotae Saernthu Naanum Aatsi Seyvaenae Naamellaarum Naatukindra Pattanamathu - Angkae Naadhanaesu Veerrirukkum Nalla Naadathu Naanum Selluvaen En Appaa Veettirku Kaalakaalam Karttharotu Paati Makizhvaenae Iraajjiyatthin Moolaikkallaay Yesu Irukkiraar Naanilatthil Engkum Avar Oli Veesuthae Orae Nakaramaay Orae Kutumbamaay Inaikkappatta Aalayamaay Ezhumpi Nirkuthae