பாடல் #38789
பேரின்ப பாடல்கள் பாடியே துதித்து
🔤 Paerinba Paadalkal Paatiyae Thuthitthu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பேரின்ப பாடல்கள் பாடியே துதித்து நேசரை புகழ்ந்திடுவேன் ஆனந்த கீதத்தால் அவர் பாதம் அமர்ந்து இயேசுவை துதித்திடுவேன் பயப்படாதே வலக்கரத்தால் பாதுகாப்பேன் என்றதாலே பாசத்தோடு கர்த்தர் பாதை ஆசையோடு வழி நடப்பேன் திக்கற்றோராய் விடுவதில்லை என்றதாலே எஸ்தோத்திரம் போக்கு வரத்தில் என்னை நடத்தி தேற்றுவதால் ஸ்தோத்திரம் கசந்த மாரா மதுரமாகும் கொடிய யோர்தான் அகன்று போகும் நித்தமும் நீர் என்னை நினைத்து சத்திய பாதையில் நடத்துவதால் நன்றியினால் உள்ளம் மகிழ்ந்து நம்பிக்கையில் நிலைத்திருப்பேன் பெலத்தின் மேலே பெலன் அடைந்து தேவ சபையில் சேர்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paerinba Paadalkal Paatiyae Thuthitthu Naesarai Pugazhnthituvaen Aanandha Keedhatthaal Avar Paadham Amarnthu Yesuvai Thuthitthituvaen Payappataathae Valakkaratthaal Paathukaappaen Endrathaalae Paasatthotu Kartthar Paathai Aasaiyotu Vazhi Natappaen Thikkarroraay Vituvathillai Endrathaalae Esthotthiram Pokku Varatthil Ennai Natatthi Thaerruvathaal Sthotthiram Kasandha Maaraa Mathuramaakum Kotiya Yorthaan Aganru Pokum Nitthamum Neer Ennai Ninaitthu Satthiya Paathaiyil Natatthuvathaal Nanriyinaal Ullam Makizhnthu Nampikkaiyil Nilaitthiruppaen Pelatthin Maelae Pelan Atainthu Thaeva Sapaiyil Saernthituvaen