பாடல் #38780
தேசமே நீ மகிழ்ந்து களிகூரு
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
தேசமே நீ மகிழ்ந்து களிகூரு கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் இயேசுவால் ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து சென்று முறியடிப்பாய் சத்துருவை நீ வென்றிடுவாய் என்றும் ஜெயக்கொடி ஏற்றிடுவாய் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நீ என்றும் போவதில்லை ஆயிரம் ஆயிரம் தூதர்களால் காவல் காக்கும் தேவனுண்டு எதிரிகளின் முன் விருந்தொன்று ஆயத்தப்படுத்தி நடத்திடுவார் கதறி ஜெபிக்கும் உன் ஜெபத்தை கேட்டு உந்தன் கரம் பிடிப்பார் ஐந்து அப்பம் இரண்டு மீனும் ஐயாயிரம் பேர்களுக்கே திருப்தியாக தந்தாரே உம்மையும் அது போல் நடத்துவாரே இந்திய தேசம் முழுவதுமே இறை பணி நடக்க ஜெபித்திடுவோம் இயேசுவின் நாமம் வளர்ந்திடவே இராப்பகல் ஓய்வின்றி உழைத்திடுவோம்