பாடல் #3878
வா பாவி இளைப்பாற வா
🔤 Vaa Paavi Ilaippaara Vaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வா பாவி இளைப்பாற வா என் திவ்ய மார்பிலே நீ சுகமாகச் சாய்ந்திரு என்றார் க்றிஸ்தேசுவே இளைத்துப்போன நீசனாய் வந்தாறித் தேறினேன் என் பாரம் நீங்கி யேசுவால் சந்தோஷமாயினேன். 2. வா பாவி தாகந் தீர்க்க வா மெய்ப் பானம் இதுவே நான் ஜீவ தண்ணீர் தருவேன் என்றார் நல் மீட்பரே அவ்வாறு ஜீவ ஊற்றிலே நான் பானம் பண்ணுனேன் என் தாகந் தீர்ந்து யேசுவால் பேர் வாழ்வும் அடைந்தேன். 3. வா பாவி இருள் நீங்க வா என் ஒளி வீசுதே பிரகாசிப்பித்து ரட்சிப்பேன் என்றார் மா நேசரே மெய் ஞான அருணோதயம் அத்தால் கண்டடைந்தேன் என்றைக்கும் ஜீவ ஒளியில் நான் வாழ்ந்து சுகிப்பேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vaa Paavi Ilaippaara Vaa En Thivya Maarpilae Nee Sugamaagach Saaynthiru Enraar Kristhaesuvae Ilaitthuppona Neesanaay Vanthaarith Thaerinaen En Paaram Neengki Yaesuvaal Santhoshamaayinaen. 2. Vaa Paavi Thaagan Theerkka Vaa Meyp Paanam Ithuvae Naan Jeeva Thanneer Tharuvaen Enraar Nal Meetparae Avvaaru Jeeva Oorrilae Naan Paanam Pannunaen En Thaagan Theernthu Yaesuvaal Paer Vaazhvum Atainthaen. 3. Vaa Paavi Irul Neengga Vaa En Oli Veesuthae Pirakaasippitthu Ratsippaen Enraar Maa Naesarae Mey Njaana Arunodhayam Atthaal Kandatainthaen Enraikkum Jeeva Oliyil Naan Vaazhnthu Sukippaen.