பாடல் #38777
உன்னத தேவனுக்கு ஓசன்னா
🔤 Unnatha Devanukku Osannaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னத தேவனுக்கு ஓசன்னா தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா ஆவியின் வரங்களால் ஜொலித்திடவே ஜீவனின் ஊற்றுகள் சுரந்திடவே சுவிசேஷகொடியும் பறந்திடவே ஜெயதொனி கீதங்கள் முழங்கிடவே அத்தி மரம் அதோ துளிர் விடுதே வசந்த காலம் வந்திடுதே குருவிகள் பாடும் காலமிதே ஆயத்தமாகி எழும்பிடுவோம் குருத்தோலை பிடித்தவரே வாருங்கள் கருத்துடனே கர்த்தரிடம் சேருங்கள் உருக்கமாய் அவர் பாதம் நாடுங்கள் பெருக்கமாய் ஆசிர் பெற்றிடுங்கள் வெண்கல கதவுகள் உடைந்திடுமே இருப்பு தாழ்ப்பாள்கள் முறிந்திடுமே எதிர் நின்ற எரிகோவை அழித்திடவே என் அன்பர் இயேசு ஜீவிக்கிறார் மங்கள கீதங்கள் முழங்கிடுவோம் எங்குமே துதிகளை சாற்றிடுவோம் மங்கிடா மன்னவன் நீதியுடன் செங்கோலும் ஓங்குமே நித்தியமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatha Devanukku Osannaa Thaaveethin Maindhanukku Osannaa Aaviyin Varanggalaal Jolitthidavae Jeevanin Oorrugal Suranthidavae Suvisaeshakotiyum Paranthidavae Jeyathoni Keedhanggal Muzhangkidavae Atthi Maram Atho Thulir Vituthae Vasandha Kaalam Vanthituthae Kuruvigal Paatum Kaalamithae Aayatthamaaki Ezhumpituvom Kuruttholai Pititthavarae Vaarunggal Karutthudanae Karttharidam Saerunggal Urukkamaay Avar Paadham Naatunggal Perukkamaay Aasir Perritunggal Venkala Kathavugal Utainthitumae Iruppu Thaazhppaalkal Murinthitumae Ethir Nindra Erikovai Azhitthidavae En Anbar Yesu Jeevikkiraar Manggala Keedhanggal Muzhangkituvom Engkumae Thuthigalai Saarrituvom Mangkitaa Mannavan Neethiyudan Sengkolum Ongkumae Nitthiyamaay