பாடல் #38776
பெலனும் கீதமுமானவர்
🔤 Pelanum Keedhamumaanavar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலனும் கீதமுமானவர் - என் இயேசுவே கோட்டையும் துருகமுமானவர் என் தேவனே எந்நாளும் அவரை நம்புவேன் கீர்த்தனம் என்றும் பண்ணுவேன் - நான் மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும்போல் என் ஆத்துமா தேவனை நோக்கி வாஞ்சித்து திருப்தியாகிடுதே கேட்டவை எல்லாம் தந்திரே அன்புடன் என்னை நடத்தினீரே கூப்பிடும் வேளையில் வந்தீரே என் ஜெபத்தை கேட்டீரே இலக்கை நோக்கி ஓடுவேன் பின்திரும்பி பார்க்க மாட்டேன் இலாபமனைத்தும் விடுவேன் என் தேவனில் மகிழ்ந்திடுவேன் எத்தனை இன்னல் வந்திடினும் உம்மை என்றும் பிரியமாட்டேன் இரத்தத்தை சொல்லி எனறென்றும் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் செவிகளை இன்று திறந்து விட்டீர் செய்வேன் உம் பணியை புவி தனில் உம்விருப்பம் என்றும் பூரணமாகட்டுமே குறைகளை நீக்கும் வல்லவரே கோடி ஸ்தோத்திரமே கறைகளை போக்கும் நாயகரே வாழ்க உம் நாமம் தேடுகின்ற அனைவருமே மகிழ்ச்சியடையட்டுமே பாடுகின்ற யாவருமே பேரின்பம் கொள்ளட்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelanum Keedhamumaanavar - En Yesuvae Kottaiyum Thurugamumaanavar En Devanae Ennaalum Avarai Nampuvaen Keertthanam Enrum Pannuvaen - Naan Maankal Neerotai Vaanjsitthu Katharumpol En Aatthumaa Devanai Nokki Vaanjsitthu Thirupthiyaakituthae Kaettavai Ellaam Thanthirae Anpudan Ennai Natatthineerae Kooppitum Vaelaiyil Vantheerae En Jebatthai Kaetteerae Ilakkai Nokki Otuvaen Pinthirumpi Paarkka Maattaen Ilaabamanaitthum Vituvaen En Devanil Makizhnthituvaen Etthanai Innal Vanthitinum Ummai Enrum Piriyamaattaen Ratthatthai Solli Enarenrum Saatsiyaay Vaazhnthituvaen Sevigalai Inru Thiranthu Vitteer Seyvaen Um Paniyai Puvi Thanil Umviruppam Enrum Pooranamaagattumae Kuraigalai Neekkum Vallavarae Koti Sthotthiramae Karaigalai Pokkum Naayakarae Vaazhka Um Naamam Thaetukindra Anaivarumae Makizhchsiyataiyattumae Paatukindra Yaavarumae Paerinbam Kollattumae