பாடல் #38772
மனதுருகும் கர்த்தர் ஒருவர்
🔤 Manathurukum Kartthar Oruvar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனதுருகும் கர்த்தர் ஒருவர் இருக்கிறார் மறக்காமல் என்றும் அவர் நினைக்கிறார் காகங்களை கவனித்து பார் விதைப்பதுமில்லை பறவைகளை கவனித்துபார் அறுப்பதுமில்லை - அதை பிழைப்பூட்டும் கர்த்தர் இன்றும் இருக்கிறார் மறப்பதில்லை என்று தினம் உரைக்கிறார் கேடுவரும் நாட்களிலே மறைத்து சென்றிடுவார் கன்மலை மேல் உயர்த்தி உன்னை நிறுத்தி வைத்திடுவார் தாயின் வயிற்றில் தாங்கியவர் இருக்கிறார் தலை நரைக்கும் நாள் வரைக்கும் தாங்குவார் உள்ளங்கையில் ஏந்தி வைத்துதினமும் பார்க்கிறார் விதவிதமாய் உடுத்தி உள்னை அழகு பார்க்கிறார் கழுகை போல சுமக்கும் கர்த்தர் இருக்கிறார் காலமெல்லாம் காப்பேன் என்று உரைக்கிறார் பாரமான யாவற்றையும் உதறி தள்ளிடு நடந்தவற்றை மறந்துவிட்டு எழுந்து போரிடு ஜெயம் கொடுக்கும் தேவன் இன்றும் இருக்கிறார் ஜெயமான பாதையிலே நடத்துவார் வறட்சியான காலங்களில் திருப்தியாக்குவார் திரட்சியாக சந்ததியை வளர செய்திடுவார் உருட்சியான மன்னாவினால் நிரப்புவார் புரட்சியாக வழிந்து ஓடச் செய்குவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manathurukum Kartthar Oruvar Irukkiraar Marakkaamal Enrum Avar Ninaikkiraar Kaaganggalai Kavanitthu Paar Vithaippathumillai Paravaigalai Kavanitthupaar Aruppathumillai - Athai Pizhaippoottum Kartthar Inrum Irukkiraar Marappathillai Enru Thinam Uraikkiraar Kaetuvarum Naatkalilae Maraitthu Senrituvaar Kanmalai Mael Uyartthi Unnai Nirutthi Vaitthituvaar Thaayin Vayirril Thaangkiyavar Irukkiraar Thalai Naraikkum Naal Varaikkum Thaangkuvaar Ullangkaiyil Aenthi Vaitthuthinamum Paarkkiraar Vidhavidhamaay Ututthi Ulnai Azhaku Paarkkiraar Kazhukai Pola Sumakkum Kartthar Irukkiraar Kaalamellaam Kaappaen Enru Uraikkiraar Paaramaana Yaavarraiyum Udhari Thallitu Natandhavarrai Maranthuvittu Ezhunthu Poritu Jeyam Kotukkum Devan Inrum Irukkiraar Jeyamaana Paathaiyilae Natatthuvaar Varatsiyaana Kaalanggalil Thirupthiyaakkuvaar Thiratsiyaaga Sandhathiyai Valara Seythituvaar Urutsiyaana Mannaavinaal Nirappuvaar Puratsiyaaga Vazhinthu Odach Seykuvaar.