பாடல் #38770
கர்த்தருக்கே கனம் செலுத்திடுவோம்
🔤 Karttharukkae Kanam Selutthituvom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கே கனம் செலுத்திடுவோம் கருத்துடனே நாம் துதித்துடுவோம் முழங்காலிலிருந்து கர்த்தரையே முழு மனதுடனே துதித்துடுவோம் தாழ்மையுடன் தேவ கிருபையுமே வாழ்விலே என்றும் பெற்றிடுவோம் வானாதி வானங்கள் கொள்ளாதவர் தேவாதி தேவனாய் இறங்குவாரே ஒரு மனதாக கூடிடுவோம் ஊரெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம் எலியாவின் ஆவி இறங்கிடவே சலியாமல் பின்பற்றி சென்றிடுவோம் ஆவியின் வரங்களால் நிறைந்திடவே பலவந்தமாக பெற்றிடுவோம். மங்கின திரிகள் எரிந்திடவே இறங்கின ஆவி தங்கிடவே அனலுடனே நாம் எழும்பிடவே ஆண்டவரிடமே வேண்டிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukkae Kanam Selutthituvom Karutthudanae Naam Thuthitthutuvom Muzhangkaalilirunthu Karttharaiyae Muzhu Manathudanae Thuthitthutuvom Thaazhmaiyudan Thaeva Kirupaiyumae Vaazhvilae Enrum Perrituvom Vaanaathi Vaananggal Kollaadhavar Thaevaathi Devanaay Irangkuvaarae Oru Manathaaga Kootituvom Oorellaam Jeyakkoti Aerrituvom Eliyaavin Aavi Irangkidavae Saliyaamal Pinbarri Senrituvom Aaviyin Varanggalaal Nirainthidavae Palavandhamaaga Perrituvom. Mangkina Thirigal Erinthidavae Irangkina Aavi Thangkidavae Analudanae Naam Ezhumpidavae Aandavaridamae Vaentituvom