பாடல் #38768
என் மனமே நீ ஏன் கலங்குகிறாய்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
என் மனமே நீ ஏன் கலங்குகிறாய் உன் மீட்பரே உயிரோடிருக்கையிலே குறைவெல்லாம் தீர்ப்பவரே நிறைவாக வருபவரே விரைவாக வந்து மறைவாக நின்று உன் தலையை உயர்த்துவாரே உலகமே எதிர்க்கட்டுமே சகலரும் ஒதுக்கட்டுமே பகலவன் என்றும் உன்னோடிருந்து பதில் சொல்லி நடத்துவாரே உன் வேண்டுதல்களெல்லாம் உன் தேவன் நிறைவாக்குவார் உன் கண்ணீர் துடைத்து உன் கரம் பிடித்து சோகத்தை மாற்றுவாரே கல்வாரி திரு இரத்தமே - உன் கறையெல்லாம் போக்கிடுமே உயிருள்ள கிறிஸ்து உன்னோடிருந்து உயர்வாக நடத்துவாரே