பாடல் #38728
கர்த்தரின் நாமம் பலத்த துருகம்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
கர்த்தரின் நாமம் பலத்த துருகம் நீதிமான் அதற்குள் சுகம் பெறுவான் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் ஆண்டவரே உருவாக்கினார் பெலனும் சுகமும் தந்திடுவார் இகத்தில் அவரே பரிகாரியே குயவன் கையில் களிமண் போல் குருவே நம்மை வனைந்திடுவார் கர்த்தரின் சித்தம் நம் பாக்கியம் அவரை நம்பி வாழ்ந்திடுவோம் பாதையில் துன்பங்கள் தொடர்ந்த போதும் பாரினில் ஜெயிக்க பெலப்படுத்தும் உம் சித்தம் என்னில் நிறைவேற்றிடும் உத்தமராக விளங்கச் செய்யும் ஜெயம் கொண்ட தாசரெல்லாம் ஜொலிப்பார் மணவாளன் வருகையிலே ஜெயத்துடனே விழித்திருப்போம் ஜெகத்தை என்றும் ஜெயித்திடுவோம் அவரையல்லாமல் யாருமில்லை பூலோகில் வேறு விருப்பமில்லை உம் அன்பு என்னை நெருக்கிடுதே முடிவில் மகிமையில் சேர்த்திடுமே