பாடல் #38688
நீ ஒளியாகும் என் பாதைக்கு
🔤 Nee Oliyaakum En Paathaikku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்கு துணையாகும் அரணும் நீயே கோட்டையும் நீயே அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே நீ வரும் நாளில் உன் அமைதி வரும் - உன் நீதியும் அருளும் சுமந்து வரும் இரவின் இருளிலும் பயம்விலகும் - உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும் கால்களும் இடறி வீழ்வதில்லை தோள்களும் சுமையாய் சாய்வதில்லை என் ஆற்றலும் வலிமையும் நீயாவாய் (2) -நீ ஒளியாகும் விடியலைத் தேடிடும் விழிகளிலே புது விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ பால்நினைந்தூட்டும் தாயும் என் பால்வழி பயணத்தின் பாதையும் நீ அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ என் மீட்பரும் நேசரும் நீயாகும் (2) -நீ ஒளியாகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Oliyaakum En Paathaikku Vilakkaakum Nee Vazhiyaakum En Vaazhvukku Thunaiyaakum Aranum Neeyae Kottaiyum Neeyae Anbanum Neeyae Nanpanum Neeyae Iraivanum Neeyae Nee Varum Naalil Un Amaithi Varum - Un Neethiyum Arulum Sumanthu Varum Iravin Irulilum Payamvilakum - Un Karatthin Valimaiyil Uyarvu Varum Kaalkalum Idari Veezhvathillai Tholkalum Sumaiyaay Saayvathillai En Aartralum Valimaiyum Neeyaavaay (2) -nee Oliyaakum Vitiyalaith Thaetitum Vizhigalilae Puthu Vilakkinai Aerritum Paeroli Nee Paalninainthoottum Thaayum En Paalvazhi Payanatthin Paathaiyum Nee Aruvikku Natatthitum Aayanum Nee Agamanam Amarnthennai Aalpavan Nee En Meetparum Naesarum Neeyaakum (2) -nee Oliyaakum