பாடல் #38686
இன்பக் கனவொன்று நான் கண்டேன்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
இன்பக் கனவொன்று நான் கண்டேன் இறையாட்சி மலரக் கண்டேன் எங்கும் மனங்கள் மகிழக் கண்டேன் -2 1. இயேசுவின் அருகினில் ஏழைகள் அமரக் கண்டேன் இறை அன்பினில் அகிலமே ஒன்றென உணர்ந்து நின்றேன் -2 பிறர்க்கென வாழ்ந்திடும் மனிதர்கள் பலரைக் கண்டேன் -2 பிறர்நலம் பேணிடும் பணியில் எனை இணைத்தே…ன் எந்தன் வாழ்வின் பொருள் அறிந்தேன் 2. அன்பே அனைவர்க்கும் ஆக்கம் என அறிந்தேன் அகச் சுதந்திரமே எங்கும் ஒளியெனக் கண்டு கொண்டேன் - 2 நீதியின் பாதையில் யாவரும் நடக்கக் கண்டேன் -2 நிதமும் புதுமை வாழ்வில் சேரக் கண்டேன் அன்பின் நிறைவை நான் கண்டேன்