பாடல் #38684
கர்த்தருக்கு காத்திருந்தேன்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
கர்த்தருக்கு காத்திருந்தேன் கோலியாத்தை முறியடிப்பேன் -2 இயேசுவின் நாமத்தினால் சாத்தானை முறியடிப்பேன் -2 1. ஒருமுறை சிங்கம் வந்தது ஆடுகளைக் கவ்வி சென்றது -2 தொடர்ந்து நான் போய் இயேசுவின் நாமத்தில் சிங்கத்தின் வாயை கிழித்து விட்டேன் -2 2. இடைவிடா ஜெபத்தினாலும் கடும் உபவாசங்களினாலும் -2 சாத்தானை ஜெயித்திடுவாய் அவன் தந்திரத்தை முறியடிப்பாய் -2 3. ஒருமுறை சிங்ககெபியில் தானியேல் போடப்பட்டான் -2 இடைவிடா ஜெபத்தினாலும் அவன் சிங்கத்தை ஜெயித்தெழுந்தான் -2 4. சூழ்நிலைகள் சாக சொல்லுது இயேசு வசனம் ஜீவன் தந்தது -2 கர்த்தரின் நாமத்தினால் சாத்தானை வென்றிடலாம் -2