பாடல் #38644
என்னை படைத்தவரே பாதுகாப்பவரே
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
என்னை படைத்தவரே பாதுகாப்பவரே உமக்கே ஆராதனை என்னை அறிந்தவரே தெரிந்து கொண்டவரே உமக்கே ஆராதனை ஆராதனை துதி ஆராதனை உமக்கு தான் ஆராதனை -2 உமக்கே ஆராதனை இயேசுவே உமக்கு ஆராதனை -2 1. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் படைத்தவரே -2 வழுவாது காப்பவரே இயேசுவே உமக்கே ஆராதனை -2 2. பரிசுத்தரே பரிகாரியே பலியாக வந்து என்னை மீட்டவரே -2 பாவிக்கு புகலிடமே இயேசுவே உமக்கே ஆராதனை -2 3. நித்தியரே நிரந்தரமே நித்திய கண்மலையானவரே -2 நித்தமும் காப்பவரே இயேசுவே உமக்கு ஆராதனை -2