பாடல் #38635
எழுப்புதல் தாரும் எழுப்புதல் தாரும்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
எழுப்புதல் தாரும் எழுப்புதல் தாரும் எழுப்புதல் இன்றே தாரும் -2 என் உள்ளத்தில் என் இல்லத்தில் எழுப்புதல் இன்றே தாரும் சபையினில் தேசத்தில் எழுப்புதல் இன்றே தாரும் -2 1. பரிசுத்த ஆவியின் எழுப்புதல் தாரும் பாவிகள் பரமனை அண்டிட செய்யும் -2 பரிசுத்தவான்கள் யாவரையும் பரமனின் வருகைக்காய் ஆயத்தம் செய்யும்-2 2. வசனத்தின் எழுப்புதல் வாழ்கையில் தாரும் வல்லமை விளங்கிட வாழ்திட செய்யும் -2 வார்த்தையில் அல்ல கிரியையிலே கர்த்தரை தேவன் என்று நிருபிக்க செய்யும் -2 3. பரிசுத்த ஆவியின் எழுப்புதல் தாரும் பாவிகள் பரமனை அண்டிட செய்யும் -2 பரிசுத்தவான்கள் யாவரையும் பரமனின் வருகைக்காய் ஆயத்தம் செய்யும்-2