பாடல் #38617
இராஜாதி இராஜனை வாழ்த்தி
🔤 Iraajaathi Iraajanai Vaazhtthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜாதி இராஜனை வாழ்த்தி பாடுவோம் இரக்கம் உள்ள இயேசுவை போற்றி பாடுவோம் அல்லேலூயா அல்லேலூயா போற்றி பாடுவோம் ஆனந்த மகிமையோடே புகழ்ந்து பாடுவோம் எரிகோவை தகர்த்திட்ட ஏகபரன் கர்த்தனுக்கு ஏகமாய் ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போமே இஸ்ரவேலின் தேவன் அவர் இன்றும் என்றும் காப்பதாலே ஸ்தோத்திரங்கள் ஏறெடுத்து ஆர்ப்பரிப்போமே எதிர்ப்புகள் வந்திட்டாலும் சோதனைகள் மேலிட்டாலும் சோர்ந்திடாமல் தேவனையே சேர்ந்திடுவோமேw தானியேலின் தேவன் அவர் தானாய் வந்து மீட்பதாலே தரணியில் ஸ்தோத்தரித்து ஆர்ப்பரிப்போமே சர்வத்தையும் படைத்தவர் சர்வ வல்ல தேவன் அவர் சாபத்தையும் ரோகத்தையும் சேர்த்தழிப்பவர் தம்மை நோக்கி கூப்பிடும் தாசர் சத்தம் கேட்டிடும் தேவன் அவரை ஸ்தோத்தரித்து ஆர்ப்பரிப்போமே பெருவெள்ள சீறல் வந்து பெரு நஷ்டம் நேரிட்டாலும் பொறுமையோடு கர்த்தர் பாதம் அண்டிக்கொள்வோமே வார்த்தையாலே அலை அமர்த்தி வாழவைக்கும் தேவன் அவரை ஸ்தோத்திரங்கள் ஏறெடுத்து ஆர்ப்பரிப்போமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaathi Iraajanai Vaazhtthi Paatuvom Irakkam Ulla Yesuvai Porri Paatuvom Allaelooyaa Allaelooyaa Porri Paatuvom Aanandha Makimaiyotae Pugazhnthu Paatuvom Erikovai Thakartthitta Aegaparan Kartthanukku Aegamaay Sthotthiranggal Aeretuppomae Isravaelin Devan Avar Inrum Enrum Kaappathaalae Sthotthiranggal Aeretutthu Aarpparippomae Ethirppugal Vanthittaalum Sodhanaigal Maelittaalum Sornthitaamal Devanaiyae Saernthituvomaew Thaaniyaelin Devan Avar Thaanaay Vanthu Meetpathaalae Tharaniyil Sthottharitthu Aarpparippomae Sarvatthaiyum Pataitthavar Sarva Valla Devan Avar Saabatthaiyum Rogatthaiyum Saertthazhippavar Thammai Nokki Kooppitum Thaasar Sattham Kaettitum Devan Avarai Sthottharitthu Aarpparippomae Peruvella Seeral Vanthu Peru Nashtam Naerittaalum Porumaiyotu Kartthar Paadham Antikkolvomae Vaartthaiyaalae Alai Amartthi Vaazhavaikkum Devan Avarai Sthotthiranggal Aeretutthu Aarpparippomae