பாடல் #38613
ஜெயமே இரத்தத்தால் ஜெயமே வருமே
🔤 Jeyamae Ratthatthaal Jeyamae Varumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயமே இரத்தத்தால் ஜெயமே வருமே இயேசுவால் வருமே சத்துருவின் சேனை வெள்ளம் போல வந்தாலும் மித்துருவாய் மாற்றிடும் தேவனவர் பாவி நம்மையே இரட்சித்திடவே ஆவியானவர் வந்து கொடியேற்றுவார் சத்தியமென்னும் கச்சையும் நீதியென்னும் கவசமும் ஆயத்தமாம் பாதரட்சை தரித்திடுவோம் விசுவாசமாம் கேடகத்தோடே இரட்சண்ணிய தலை சீரா அணிந்திடுவோம் -ஜெ திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்கை நினைத்தே திருவாய் மலர்ந்தென்னை தேற்றினாரே திசையறியாது தியங்கிடும் போது தீபமாக வந்து என்னை உயர்த்தினாரே ஊற்றுண்ட தைலமாம் இயேசுவின் நாமத்தில் உலகத்தின் சக்திகளை ஜெயித்திடுவேன் ஊக்கத்தோடே நான்ஜெபித்திடுவேன் உண்மை தேவன் என்னோடே வழி நடப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyamae Ratthatthaal Jeyamae Varumae Yesuvaal Varumae Satthuruvin Saenai Vellam Pola Vanthaalum Mitthuruvaay Maarritum Devanavar Paavi Nammaiyae Iratsitthidavae Aaviyaanavar Vanthu Kotiyaerruvaar Satthiyamennum Kachsaiyum Neethiyennum Kavasamum Aayatthamaam Paadharatsai Tharitthituvom Visuvaasamaam Kaedakatthotae Iratsanniya Thalai Seeraa Aninthituvom -je Thikaiyaathae Naan Un Devan Endra Vaakkai Ninaitthae Thiruvaay Malarnthennai Thaerrinaarae Thisaiyariyaathu Thiyangkitum Pothu Theebamaaga Vanthu Ennai Uyartthinaarae Oorrunda Thailamaam Yesuvin Naamatthil Ulakatthin Sakthigalai Jeyitthituvaen Ookkatthotae Naanjepitthituvaen Unmai Devan Ennotae Vazhi Natappaar