பாடல் #38607
என் இதயம் எந்நாளுமே
🎙 கிறிஸ்தவ பாடல்
என் இதயம் எந்நாளுமே - கர்த்தரை கெம்பீரித்தே பாடுமே சிற்சில வேளையில் சிட்சைகளால் சுத்தமாக்கினீர் உம் சாயலாய் கர்த்தாவே நான் உந்தன் செல்ல பிள்ளை கலங்கிட விட மாட்டீர் என்றென்றுமே ஆறாத மன புண்ணை ஆற்றுவார் ஆறுதல் தேறுதல் தந்திடுவார் ஆனந்தமான பாடலுடன் ஆசீர் பெற என்னை நடத்திடுவார் மணவாளன் வரும் வரை காத்திருப்பேன் மங்கிட விட மாட்டேன் என்விளக்கை ஆயத்தமாய் விழித்திருப்பேன் அன்பரை நேர்முகம் சந்திக்கவே கார்மேகம் மூடி எதிர்காற்றடித்தும் காலை தோறும் புது கிருபையாலே வாதை ஒன்றும் அணுகாமலே வாழ்விக்கும் தேவன் நீர் கர்த்தர் தாமே