பாடல் #38579
சுத்தர் துதிக்கும் வீடே
🔤 Sutthar Thuthikkum Veetae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சுத்தர் துதிக்கும் வீடே தெய்வ பக்தர்கள் ஆசையாமே ஒளி மிளிரும் தங்கத் தெரு வீதியில் ஆவலுடன் என்று நான் சேருவேனோ (2) வானவரின் துதி நாதம் தொனி முழங்கும் சாலேமில் (2) என்று நான் சேருவேனோ பரசுதனை (4) 2. முத்தினால் நிரம்பியதாய் உள்ள பனிரெண்டு வாசல்களே - அதை கண்டு வர்ணித்து ஆனந்திப்பேன்-மணவாளன் மனபாரம் நீக்கிடுவார் (2) 3. காரிருள் இல்லா நாடே -தேவ மகிமையில் மின்னும் வீடே அதின் விளக்கோ தேவாட்டுக் குட்டியாமே-அதில் நின்று பாடித் துதித்திடுவேன் (2) 4. கஷ்டங்கள் இல்லா நாடே -தேவ பக்தரின் பரம வீடே -அலங்கரித்த புதிய எருசலேமில் திருமார்பில் என்று நான் சாய்ந்திடுவேன் (2) 5. இக்காலப் பாடுகளோ -தேவ பக்தர்க்கு நிலையில்லையே-இனி வருமே இணையில்லா கன மகிமை-அதை எண்ணி எந்நாளும் வாழ்ந்திடுவோம் - 2 6- களங்கமில்லாத் தெளிந்த - சுத்த ஜீவ ஜல நதியின் - கரைகளதில் ஜீவ விருட்சக்கனி - சுகமருளும் தெய்வத்தின் தோட்டமது (2) 7- சுத்தர் சிங்காசனத்தைச் - சுற்றிவரச் சுரமண்டலக்காரரே - நதி போன்ற ஆசையுண்டாகு தென்னில் தூதரோடு சேர்ந்தங்கு பாடிடவே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sutthar Thuthikkum Veetae Theyva Paktharkal Aasaiyaamae Oli Milirum Thanggath Theru Veethiyil Aavaludan Enru Naan Saeruvaeno (2) Vaanavarin Thuthi Naadham Thoni Muzhangkum Saalaemil (2) Enru Naan Saeruvaeno Parasudhanai (4) 2. Mutthinaal Nirampiyathaay Ulla Panirentu Vaasalkalae - Athai Kantu Varnitthu Aananthippaen-manavaalan Manapaaram Neekkituvaar (2) 3. Kaarirul Illaa Naatae -thaeva Makimaiyil Minnum Veetae Athin Vilakko Thaevaattuk Kuttiyaamae-athil Ninru Paatith Thuthitthituvaen (2) 4. Kashtanggal Illaa Naatae -thaeva Paktharin Parama Veetae -alanggarittha Puthiya Erusalaemil Thirumaarpil Enru Naan Saaynthituvaen (2) 5. Ikkaalap Paatugalo -thaeva Paktharkku Nilaiyillaiyae-ini Varumae Inaiyillaa Kana Makimai-athai Enni Ennaalum Vaazhnthituvom - 2 6- Kalanggamillaath Thelindha - Suttha Jeeva Jala Nathiyin - Karaigalathil Jeeva Virutsakkani - Sugamarulum Theyvatthin Thottamathu (2) 7- Sutthar Singkaasanatthaich - Surrivarach Suramandalakkaararae - Nathi Pondra Aasaiyuntaaku Thennil Thoodharotu Saerndhangku Paatidavae (2)