பாடல் #38569
ஸ்தோத்திர கீதங்கள்
🔤 Sthotthira Keedhanggal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திர கீதங்கள் பாடிடுவோம் துதிகன மகிமையும் செலுத்திடுவோம் வருத்தத்தால் சுமந்த பாரமெல்லாம் கருத்துடன் நினைத்து நீக்கினாரே கரை புரண்டோடும் அன்பினாலே சிறை எடுத்தென்றும் தேற்றினாரே பாடுகள் வியாதிகள் வந்தபோது தேடியே வந்து தேற்றினாரே கண்ணீரை துடைத்து மாற்றினாரே கண்மணி போல காத்தாரே அப்பமும் தண்ணீரும் பிள்ளைகட்கு தப்பாமல் என்றும் அளித்தாரே ஒப்பில்லா நேசரின் திருநாமம் எப்பவும் நினைத்து துதித்திடுவோம் பார்வோனின் சேனைகள் தொடர்ந்த போதும் யோர்தானின் அலைகள் புரண்டபோதும் அக்கினி ஸ்தம்பமாய் வந்தாரே அரணும் கேடகமும் தந்தாரே மோட்சத்தின் பாக்கியத்தை நினைக்கும் தோறும் பொங்குதே உள்ளம் சந்தோஷத்தால் மாட்சிமை உள்ள மணவறையில் மகிபனோடென்றும் வாழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthira Keedhanggal Paatituvom Thuthigana Makimaiyum Selutthituvom Varutthatthaal Sumandha Paaramellaam Karutthudan Ninaitthu Neekkinaarae Karai Purantotum Anpinaalae Sirai Etutthenrum Thaerrinaarae Paatugal Viyaathigal Vandhapothu Thaetiyae Vanthu Thaerrinaarae Kanneerai Thutaitthu Maarrinaarae Kanmani Pola Kaatthaarae Appamum Thanneerum Pillaigatku Thappaamal Enrum Alitthaarae Oppillaa Naesarin Thirunaamam Eppavum Ninaitthu Thuthitthituvom Paarvonin Saenaigal Thodarndha Pothum Yorthaanin Alaigal Purandapothum Akkini Sthambamaay Vanthaarae Aranum Kaedakamum Thanthaarae Motsatthin Paakkiyatthai Ninaikkum Thorum Pongkuthae Ullam Santhoshatthaal Maatsimai Ulla Manavaraiyil Makibanotenrum Vaazhnthituvom