பாடல் #38568
மகிழ்ந்து பாடு சேர்ந்து பாடு
🔤 Makizhnthu Paatu Saernthu Paatu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ந்து பாடு சேர்ந்து பாடு என்ன ஆனந்தம் அன்பர் இயேசு தேடியே வந்து என்னை இரட்சித்தார் அன்பர் இயேசு தேடியே வந்து நம்மை இரட்சித்தார் என மாய லோக சந்தோஷங்கள் மாறி போகுமே - நம் காயமதில் நியாயத் தீர்ப்பு வந்து சேருமே இப்போதே உலக சினேகம் விட்டு விடுவோம் எப்போதுமே ஆயத்தமாய் விழித்திருப்போம் இன்ப துன்ப நேரத்திலும் இன்பம் அவரே இன்றும் என்றும் மாறா செல்வம் நல்ல இயேசுவே விண்ணின் இன்பம் இங்களித்தார் என்ன பாக்கியம் மண்ணின் இன்பம் வெறுத்து நாம் ஆயத்தமாவோம் இத்தரையில் இன்றும் என்றும் இயேசு போதுமே உத்தமமாய் சத்தியத்தை பற்றிக் கொள்வோமே சாட்சியாக அவர் முன்னே நின்றிடுவோம் ஆட்சி செய்ய அதிகாரம் பெற்றிடுவோம் மாண்டுபோன பரிசுத்தர் மீண்டும் வருவார் நம் ஆண்டவரும் அவரோடு சேர்ந்து வருவார் மத்திய வானில் சந்திக்க நாம் ஆயத்தமாவோம் அத்தனோடு சொர்க்க இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம் நேசமென்னும் கொடி எந்தன் மேல் பறக்குதே சேதமொன்றும் அணுகாமல் என்னைக் காக்கவே ஓசையோடு பாடிடுவேன் நல்ல மேய்ப்பரை ஆசையோடு பின்பற்றுவேன் அவர் தாசரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhnthu Paatu Saernthu Paatu Enna Aanandham Anbar Yesu Thaetiyae Vanthu Ennai Iratsitthaar Anbar Yesu Thaetiyae Vanthu Nammai Iratsitthaar Ena Maaya Loga Santhoshanggal Maari Pokumae - Nam Kaayamathil Niyaayath Theerppu Vanthu Saerumae Ippothae Ulaka Sinaegam Vittu Vituvom Eppothumae Aayatthamaay Vizhitthiruppom Inba Thunba Naeratthilum Inbam Avarae Inrum Enrum Maaraa Selvam Nalla Yesuvae Vinnin Inbam Inggalitthaar Enna Paakkiyam Mannin Inbam Verutthu Naam Aayatthamaavom Ittharaiyil Inrum Enrum Yesu Pothumae Utthamamaay Satthiyatthai Parrik Kolvomae Saatsiyaaga Avar Munnae Ninrituvom Aatsi Seyya Athikaaram Perrituvom Maantupona Parisutthar Meentum Varuvaar Nam Aandavarum Avarotu Saernthu Varuvaar Matthiya Vaanil Santhikka Naam Aayatthamaavom Atthanotu Sorkka Iraajjiyam Saernthituvom Naesamennum Koti Endhan Mael Parakkuthae Saedhamonrum Anukaamal Ennaik Kaakkavae Osaiyotu Paatituvaen Nalla Maeypparai Aasaiyotu Pinbarruvaen Avar Thaasarai