பாடல் #38567
குறைவெனக்கில்லையே
🔤 Kuraivenakkillaiyae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குறைவெனக்கில்லையே குறைவெனக்கில்லையே இயேசு என்றும் என்னோடிருப்பதால் குறைவெனக்கில்லையே இஸ்ரவேலை காத்திடும் தேவன் இராப்பகல் உறங்காரே - என் காலை தள்ளாட வொட்டாரே என்னை காக்கிறவரும் உறங்காரே உன் பக்கம் ஆயிரம் பதினாயிரம் வந்தாலும் பயப்படாதே உன்னுடன் இருக்கிறேன் என்றாரே - அவர் என்றும் ஜீவிக்கின்றாரே துன்ப நேரத்தில் நம்மை நேசித்து அன்பாய் அழைத்தாரே கரம் நீட்டி எடுத்து அணைத்தாரே - நம்மை வரங்களினாலே நிறைத்தாரே நெஞ்சின் நாவின் நாதங்களாலே நன்றி கூறிடுவோம் மிஞ்சும் ஓசை தாளங்களாலே பரவசமாகிடுவோம் சிங்ககுட்டி தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரை தேடும் பிள்ளைகட்கு ஒரு நன்மையும் குறைந்திடாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuraivenakkillaiyae Kuraivenakkillaiyae Yesu Enrum Ennotiruppathaal Kuraivenakkillaiyae Isravaelai Kaatthitum Devan Iraappakal Urangkaarae - En Kaalai Thallaada Vottaarae Ennai Kaakkiravarum Urangkaarae Un Pakkam Aayiram Pathinaayiram Vanthaalum Payappataathae Unnudan Irukkiraen Enraarae - Avar Enrum Jeevikkinraarae Thunba Naeratthil Nammai Naesitthu Anpaay Azhaitthaarae Karam Neetti Etutthu Anaitthaarae - Nammai Varanggalinaalae Niraitthaarae Nenjsin Naavin Naadhanggalaalae Nanri Koorituvom Minjsum Osai Thaalanggalaalae Paravasamaakituvom Singgakutti Thaazhchsiyatainthu Pattiniyaayirukkum Karttharai Thaetum Pillaigatku Oru Nanmaiyum Kurainthitaathae