பாடல் #38565
கலங்காதே மனமே கர்த்தர்
🔤 Kalangkaathae Manamae Kartthar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே மனமே கர்த்தர் இயேசென்றும் உன்னோடிருக்கின்றாரே உறங்காமலே தூங்காமலே உன்னை காக்கின்றாரே காக்கும் கரங்களால் அணைத்தென்றுமே - உன்னை தாக்கும் சத்துருவை அழித்திடவே உன்பக்கம் நிழலாய் உன் தேவன் அரணாய் உன்னோடே என்றென்றும் நிற்கின்றாரே இந்த தேவன் என்றென்றுமே சதா காலத்திலும் நம் தெய்வமே மரண பரியந்தம் கருணையோடே நம்மை தருணம் மாறாமலே காத்திடுவார் மலை போன்ற துன்பங்கள் வந்தாலுமே தலைமயிர் ஒன்றுமே விழுந்திடாதே கோட்டையும் அரணுமாய் நேசரிருப்பதால் நெஞ்சே நீ என்றுமே சோர்ந்திடாதே வியாதிகளால் பெலன் குன்றினாலும் ஜாதிகளால் பகைக்கப்பட்டாலுமே துன்பம் சகித்திடும் அன்பான பக்தர்கள் பேரின்ப இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Manamae Kartthar Yesenrum Unnotirukkinraarae Urangkaamalae Thoongkaamalae Unnai Kaakkinraarae Kaakkum Karanggalaal Anaitthenrumae - Unnai Thaakkum Satthuruvai Azhitthidavae Unbakkam Nizhalaay Un Devan Aranaay Unnotae Enrenrum Nirkinraarae Indha Devan Enrenrumae Sathaa Kaalatthilum Nam Theyvamae Marana Pariyandham Karunaiyotae Nammai Tharunam Maaraamalae Kaatthituvaar Malai Pondra Thunbanggal Vanthaalumae Thalaimayir Onrumae Vizhunthitaathae Kottaiyum Aranumaay Naesariruppathaal Nenjsae Nee Enrumae Sornthitaathae Viyaathigalaal Pelan Kunrinaalum Jaathigalaal Pakaikkappattaalumae Thunbam Sakitthitum Anpaana Paktharkal Paerinba Iraajjiyam Saernthituvom