பாடல் #38563
இஸ்ரவேலே என் ஜனமே
🔤 Isravaelae En Janamae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலே என் ஜனமே நீ என்றுமே இடறிட வேண்டாமே யேகோவாவே உன் தெய்வமானால் பயம் ஏன் உனக்கு நெஞ்சமே ஓங்கும் புயமும் பலத்த கரமும் உன் பக்கமே நிற்குமே தாங்கும் கிருபை தயவு இரக்கம் தாராளமாய் கிடைக்குமே விக்கினத்தில் விலக்கி காக்க விண்ணவர் துணை உனக்குண்டு ஆரோன் மோசே என்னும் நல்ல ஆசாரியர் உனக்குண்டு செங்கடலில் வழி நடத்தின சீனாய் மலையின் நாதனே பங்கமின்றி பராமரிக்கும் பரமன் இயேசு நான்தானே இரவின் பயமும் பகலின் அம்பும் உன்னை சேத படுத்தாதே வாதை ஒன்றும் அணுகிடாமல் பாதுகாக்க வந்தேனே சதா காலம் உன்னோடிருப்பேன் என்று வாக்கு உறைத்தேனே உன்னை விட்டு விலகேன் என்ற உறுதி வார்த்தை அளித்தேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelae En Janamae Nee Enrumae Idarida Vaentaamae Yaekovaavae Un Theyvamaanaal Payam Aen Unakku Nenjjamae Ongkum Puyamum Palattha Karamum Un Pakkamae Nirkumae Thaangkum Kirupai Thayavu Irakkam Thaaraalamaay Kitaikkumae Vikkinatthil Vilakki Kaakka Vinnavar Thunai Unakkuntu Aaron Mosae Ennum Nalla Aasaariyar Unakkuntu Senggatalil Vazhi Natatthina Seenaay Malaiyin Naadhanae Panggaminri Paraamarikkum Paraman Yesu Naanthaanae Iravin Payamum Pakalin Ampum Unnai Saedha Patutthaathae Vaathai Onrum Anukitaamal Paathukaakka Vanthaenae Sathaa Kaalam Unnotiruppaen Enru Vaakku Uraitthaenae Unnai Vittu Vilakaen Endra Uruthi Vaartthai Alitthaenae