பாடல் #38560
உம்மைத் தவிர வேறு தெய்வம்
🔤 Ummaith Thavira Vaeru Theyvam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைத் தவிர வேறு தெய்வம் இப்புவியில் இன்றும் என்றும் இல்லையென்பேன் துதிபாடுவேன் என்றும் உம்மை போற்றுவேன், வையகத்தில் மெய்யன் என்று நான் கூறுவேன் அக்கினியின் மத்தியில் நீர் நால்வரானீரே விடுவிக்கும் வாக்குத்தத்தம் அவர்க்கு ஈந்திரே விசுவாச கேடகமாய் நிற்கச் செய்திரே சேதம் ஒன்றும் அணுகாமல் விடுவித்திரே செங்கடலை பிரித்து நிரே நிற்கச் செய்திரே சத்துருவை அழித்து இஸ்ரவேலை மீட்டீரே அக்கினி ஸ்தம்பம் மேகஸ்தம்பம் கூட்டி நின்றீரே வழி நடத்தும் தேவன் என்று காட்டிச் சென்றீரே நாலுநாளின் நித்திரையில் நாறுமென்றாரே அனைவரும் கலங்கி அங்கே சோர்ந்து நின்றாரே விசுவாச உறுதி அங்கே வேண்டுமென்றீரே லாசருவே எழுந்திரு என்று சொன்னீரே ஈட்டியாலே குத்தப்பட்டு ஜீவன் ஈந்தீரே தீட்டுப்பட்ட குஷ்டரோகம் திரும் என்றீரே பாவத்தாலே வந்ததெல்லாம் சாபமாயிற்றே பரிகாரி இயேசுவாலே தீர்ந்து போயிற்றே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaith Thavira Vaeru Theyvam Ippuviyil Inrum Enrum Illaiyenpaen Thuthipaatuvaen Enrum Ummai Porruvaen, Vaiyakatthil Meyyan Enru Naan Kooruvaen Akkiniyin Matthiyil Neer Naalvaraaneerae Vituvikkum Vaakkutthattham Avarkku Eenthirae Visuvaasa Kaedakamaay Nirkach Seythirae Saedham Onrum Anukaamal Vituvitthirae Senggatalai Piritthu Nirae Nirkach Seythirae Satthuruvai Azhitthu Isravaelai Meetteerae Akkini Sthambam Maegasthambam Kootti Ninreerae Vazhi Natatthum Devan Enru Kaattich Senreerae Naalunaalin Nitthiraiyil Naarumenraarae Anaivarum Kalangki Angkae Sornthu Ninraarae Visuvaasa Uruthi Angkae Vaentumenreerae Laasaruvae Ezhunthiru Enru Sonneerae Eettiyaalae Kutthappattu Jeevan Eentheerae Theettuppatta Kushtarogam Thirum Enreerae Paavatthaalae Vandhathellaam Saabamaayirrae Parikaari Yesuvaalae Theernthu Poyirrae