பாடல் #38554
பரலோகம் பரலோகமே பரிசுத்தர்கள்
🔤 Paralogam Paralogamae Parisuttharkal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகம் பரலோகமே பரிசுத்தர்கள் போகுமிடமே பரலோகம் பரலோகமே முத்துக்கள் மின்னுமிடமே பாடுபட்ட பக்தர்களின் ஓய்வு ஸ்தலமே பரமன் இயேசு பரிந்துபேசும் இன்ப ஸ்தலமே பாரில் வெற்றி சிறந்த பக்தர் போகுமிடமே தூதர் அவரை வரவேற்கும் மகிமை இடமே பளிங்கு நதி பாய்ந்து அங்கு செழிக்க செய்யுமே புதிய கனி மாத மாதம் பழுத்து தொங்குமே ஜீவக்கனி மக்களின் பசி தீர்க்குமே துன்பமின்றி இன்பமாய் வாழ்ந்திடுவோமே ஆட்டுக்குட்டி யானவரே ஆலயமாமே ஆட்டுக்குட்டி ஒளி அங்கு வீசிடுவாரே நகரத்திற்கு ஒளி கொடுக்க சுடர் இல்லையே தேவ மகிமையே அதை பிரகாசிபிக்குமே இராக்காலம் இல்லாத இன்ப இடமே வாசல்கள் ஒருபோதும் அடைப்பதில்லையே பேர் எழுதப் பட்டவர்கள் மாத்திரம் அங்கே மற்றவர்கள் ஒருபோதும் போவதில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogam Paralogamae Parisuttharkal Pokumidamae Paralogam Paralogamae Mutthukkal Minnumidamae Paatubatta Paktharkalin Oyvu Sthalamae Paraman Yesu Parinthupaesum Inba Sthalamae Paaril Verri Sirandha Pakthar Pokumidamae Thoodhar Avarai Varavaerkum Makimai Idamae Palingku Nathi Paaynthu Angku Sezhikka Seyyumae Puthiya Kani Maadha Maadham Pazhutthu Thongkumae Jeevakkani Makkalin Pasi Theerkkumae Thunbaminri Inbamaay Vaazhnthituvomae Aattukkutti Yaanavarae Aalayamaamae Aattukkutti Oli Angku Veesituvaarae Nakaratthirku Oli Kotukka Sudar Illaiyae Thaeva Makimaiyae Athai Pirakaasipikkumae Iraakkaalam Illaadha Inba Idamae Vaasalkal Orupothum Ataippathillaiyae Paer Ezhudhap Pattavarkal Maatthiram Angkae Martravarkal Orupothum Povathillaiyae