பாடல் #38553
இயேசுவின் அன்பை விட்டு
🔤 Yesuvin Anpai Vittu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்? கிறிஸ்தேசுவின் அன்பை விட்டு பிரிப்பவன் யார்? பார்வோனின் சேனை பின் நின்றாலும் பயங்கர சமுத்திரம் முன் நின்றாலும் பிரகாசமானவர் இரட்சகராம் - அவர் என்றென்றும் என்னோடே நடப்பவராம் பிரிக்க முடியாத அன்பு என் இயேசுவில் உண்டான அன்பு மனுஷரின் கோபம் எரிந்தாலும் - அது நிர்மூலமாக்க நினைத்தாலும் சேனையின் அதிபதி கிறிஸ்தேசுவாம் - அவர் என்றென்றும் எனக்காக யுத்தம் செய்வார் பிரிக்க முடியாத அன்பு என் இயேசுவில் உண்டான அன்பு வியாதிகள் வந்தாலும் துக்கமில்லை மரணமே வந்தாலும் பயமுமில்லை சட்டென்று கேட்டிடும் எக்காளமே - நான் பட்டென்று சேர்வேன் அந்நாட்டிலே பிரிக்க முடியாத அன்பு என் இயேசுவில் உண்டான அன்பு ஆழத்தில் என்னை தள்ளிட்டாலும் அலைகள் வந்து மூடிட்டாலும் ஆனந்த கீதம் பாடிடுவேன் - நான் சோர்ந்திட மாட்டேன் என்றென்றுமே பிரிக்க முடியாத அன்பு என் இயேசுவில் உண்டான அன்பு நன்றியால் என்னுள்ளம் பொங்கிடுதே நன்மைதான் எனக்கவர் செய்வதெல்லாம் துதிகனம் மகிமை என்றென்றுமே பதிலாக செலுத்தி வணங்கிடுவேன் நான் பிரிக்க முடியாத அன்பு என் இயேசுவில் உண்டான அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Anpai Vittu Pirippavan Yaar? Kiristhaesuvin Anpai Vittu Pirippavan Yaar? Paarvonin Saenai Pin Ninraalum Payanggara Samutthiram Mun Ninraalum Pirakaasamaanavar Iratsakaraam - Avar Enrenrum Ennotae Natappavaraam Pirikka Mutiyaadha Anpu En Yesuvil Untaana Anpu Manusharin Kobam Erinthaalum - Athu Nirmoolamaakka Ninaitthaalum Saenaiyin Athibathi Kiristhaesuvaam - Avar Enrenrum Enakkaaga Yuttham Seyvaar Pirikka Mutiyaadha Anpu En Yesuvil Untaana Anpu Viyaathigal Vanthaalum Thukkamillai Maranamae Vanthaalum Payamumillai Sattenru Kaettitum Ekkaalamae - Naan Pattenru Saervaen Annaattilae Pirikka Mutiyaadha Anpu En Yesuvil Untaana Anpu Aazhatthil Ennai Thallittaalum Alaigal Vanthu Mootittaalum Aanandha Keedham Paatituvaen - Naan Sornthida Maattaen Enrenrumae Pirikka Mutiyaadha Anpu En Yesuvil Untaana Anpu Nanriyaal Ennullam Pongkituthae Nanmaithaan Enakkavar Seyvathellaam Thuthiganam Makimai Enrenrumae Pathilaaga Selutthi Vanangkituvaen Naan Pirikka Mutiyaadha Anpu En Yesuvil Untaana Anpu