பாடல் #38551
எந்தன் கோட்டையும் அரணுமாய்
🔤 Endhan Kottaiyum Aranumaay
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் கோட்டையும் அரணுமாய் நேசர் இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே அஞ்சிடேன் எக்காலமும் - எந்த சஞ்சலம் வந்திடினும் பஞ்சம் பலத்திடினும் எந்தன் ஏகோவா தஞ்சம் ஆவார் மிகாவேல் என் பக்கமே அந்த காபிரியேலும் என் பக்கமே உற்ற துணை யாவாரே எந்தன் தேவனின் கிருபையாலே பாடிப் பறந்திடுவேன் புது பெலனை பெற்றிடுவேன் நாடுவேன் எக்காலமே நவ எருசலேம் நாட்டினையே நரைவயது மட்டும் வரை நான் ஏந்தி சுமந்திடுவேன் தாங்கி நடத்திடுவேன் உன்னை தப்புவிப்பேன் என்றாரே இரவின் பயங்கரமும் பகலில் பறக்கும் அம்பும் நடமாடும் கொள்ளை நோயும் என்னை சேதப்படுத்திடாதே சூனிய மந்திரமும் எந்த பேய்களின் தந்திரமும் நோயின் கொடுமைகளும் அழிந்தே போய்விடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Kottaiyum Aranumaay Naesar Iruppathaal Nenjsae Nee Kalangkitaathae Anjsitaen Ekkaalamum - Endha Sanjjalam Vanthitinum Panjjam Palatthitinum Endhan Aekovaa Thanjjam Aavaar Mikaavael En Pakkamae Andha Kaapiriyaelum En Pakkamae Urtra Thunai Yaavaarae Endhan Devanin Kirupaiyaalae Paatip Paranthituvaen Puthu Pelanai Perrituvaen Naatuvaen Ekkaalamae Nava Erusalaem Naattinaiyae Naraivayathu Mattum Varai Naan Aenthi Sumanthituvaen Thaangki Natatthituvaen Unnai Thappuvippaen Enraarae Iravin Payanggaramum Pakalil Parakkum Ampum Natamaatum Kollai Noyum Ennai Saedhappatutthitaathae Sooniya Manthiramum Endha Paeykalin Thanthiramum Noyin Kotumaigalum Azhinthae Poyvitumae