பாடல் #38545
நன்றியால் பாடிடுவேன்
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
நன்றியால் பாடிடுவேன் - கர்த்தர் நன்மைகள் செய்ததினால் ஜனத்தின் நடுவினிலே என்னை மனதார உயர்த்தி வைத்தார் கணக்கில்லா நன்மைகள் செய்தார் - என்றும் கருத்துடன் பாடிடுவேன் வழியிலே பயம் நீக்கினார் - என்னை குழியிலே கரம் எடுத்தார் பழி என்னில் வந்தபோதும் - இயேசு அழியாமல் பாதுகாத்தார் வலப்பக்கம் ஆயிரமும் என் இடபக்கம் பதினாயிரம் வந்தாலும் பயமுமில்லை - எனக்கு இதுவரை சேதம் இல்லை வியாதியை குணமாக்கினார் - எந்தன் நோய்களை நீங்கச் செய்தார் பாவங்கள் ஓடச் செய்தார் - எனக்கு பரிசுத்த வாழ்வைச் தந்தார் வெற்றிக் கொடி பிடிப்பேன் - நான் வெண்ணங்கி தரித்திடுவேன் சுத்தர் நடுவினிலே - நான் துதிச் சொல்லி பாடிடுவேன்