பாடல் #38539
அழைக்கும் சத்தம் கேளாயோ
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
அழைக்கும் சத்தம் கேளாயோ இயேசு வண்டை வாராயோ அவரை அண்டி வாழ்ந்திட விரைந்து ஓடி வந்திடு பூவில் ஆசீர் பெற்றிட்டு பூரணமாய் வாழ்ந்திட பாவத்தையே ஏற்றவர் சாபத்தை அழித்தவர் மீட்கும் தேவன் அவரே மீட்பை பெற வந்திடு இன்னலுற்ற உன்னையே அன்புடன் அழைக்கிறார் துன்பம் நீங்க அவரே பற்றிக் கொள்ள வாராயோ கவலை தீர்ந்து வாழ்ந்திட கர்த்தன் அண்டை வாராயோ களிப்பில் உம்மை நிறுத்திட காவல் தெய்வம் அவரே பாரில் வெற்றி தருவார் பரம பாக்கியம் அருள்வார் பரிசுத்தம் அடைந்து பரமன் வாக்கை ஏற்றிடு