பாடல் #38519
என் இரு விழி ஓரம் கண்ணீர்
🔤 En Iru Vizhi Oram Kanneer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இரு விழி ஓரம் கண்ணீர் துளிகள் இறைவா நீ அறிவாய் ஒரு முறை வாழ்க்கை மறுமுறை இல்லை என்பதை நான் அறிவேன் -(2) கரிகிடும் சருகாய் கவலையில் நானே காரணம் நீர் அறிவாய் மாறிடும் உலகில் மாறாதே வந்து ஒருவரை நான் அறிவேன் லட்சிய தீபம் காற்றில் தவியாய் தவிக்கிறதே எத்தனை காலம் உம்மிடம் வேண்டி சுற்றினேன் அடைக்கலமாய் -(2) நேரம் கூடவில்லையா வேண்டுதல் கேட்கவில்லையா (2) அனலில் புழுவாய் துடிக்கின்றேன் உம் அருகில் வரவே ஜெபிக்கிறேன் இதுதான் லட்சியமே வேண்டும் அருள் வரமே புயலின் படகில் துடிக்கும் போது அழைக்கும் உம் கரமே தோல்வியில் துவண்டு சோதனை சுமந்து வாழ்கிறேன் எல்லைக்கடந்த துயரில் நனைந்து பயணம் போகின்றேன் -(2) அழுகுரல் கேட்க வில்லையா ஆறுதல் எனக்கு இல்லையா -(2) கண்ணீர் வற்றி துடிக்கிறேன் உம் காலடி சரணம் ஆகுகின்றேன் இதுதான் லட்சியமே வேண்டும் அருள் வரமே தனிமையில் நானும் தவிக்கும் போது அழைக்கும் உம் கரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Iru Vizhi Oram Kanneer Thuligal Iraivaa Nee Arivaay Oru Murai Vaazhkkai Marumurai Illai Enbathai Naan Arivaen -(2) Karikitum Sarukaay Kavalaiyil Naanae Kaaranam Neer Arivaay Maaritum Ulakil Maaraathae Vanthu Oruvarai Naan Arivaen Latsiya Theebam Kaarril Thaviyaay Thavikkirathae Etthanai Kaalam Ummidam Vaenti Surrinaen Ataikkalamaay -(2) Naeram Koodavillaiyaa Vaentudhal Kaetkavillaiyaa (2) Analil Puzhuvaay Thutikkinraen Um Arukil Varavae Jepikkiraen Ithuthaan Latsiyamae Vaentum Arul Varamae Puyalin Patakil Thutikkum Pothu Azhaikkum Um Karamae Tholviyil Thuvantu Sodhanai Sumanthu Vaazhkiraen Ellaikkatandha Thuyaril Nanainthu Payanam Pokinraen -(2) Azhukural Kaetka Villaiyaa Aarudhal Enakku Illaiyaa -(2) Kanneer Varri Thutikkiraen Um Kaalati Saranam Aakukinraen Ithuthaan Latsiyamae Vaentum Arul Varamae Thanimaiyil Naanum Thavikkum Pothu Azhaikkum Um Karamae