பாடல் #385
ஆண்டவா உன்றன்
🔤 Aandavaa Undran
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவா, உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத் தூண்டும் உன் ஆவி அருள்வாய். என்னைத் தியாகிக்க ஏவும் உன் அனல் மூட்டிடுவாய், இந்நிலம் தன்னில் மாளும் மனுமக்கள் மீட்பிற்காக. - ஆண் 1. புசிக்கப் பண்டமில்லாமல், பூவில் இல்லமுமே அன்றி, நசிந்து நலிந்து நாட்டில் கசிந்து கண்ணீர் சொரிந்து தேச மெல்லாம் தியங்கும் நேசமக்கள் சேவைக்கே நிமலா, எனை ஏற்றுக்கொள். - ஆண் 2. வறுமை வன் கடன் வியாதி, குருட்டாட்டம் கட்சி கடும் அறிவீனம் அந்தகாரம் மருள் மூடி மக்கள் வாடும், தருணம் இக்காலமதால், குருநாதா உனதன்பை அருள்வாய், அடியேனுக்கே. - ஆண் 3. அருமை ரட்சகா, உன்றன் அரும்பாடு கண்ணீர் தியாகம், பேரன்பு பாரச் சிலுவை, சருவமும் கண்ட என்றன் இருதயம் நைந்துருகி வெறும் பேச்சாய் நின்றிடாமல் தருணம் எனையே தந்தேன். - ஆண் 4. உலகே உன தாயினும் தலை சாய்க்கத் தாவில்லாமல் நலமே புரிந்து திரிந்தாய்; எல்லாம் துறந்து யான் உன் நல்லாவி கொண்டுழைக்க, வல்லா, உனின் சிலுவை அல்லால் வழி வேறுண்டோ? - ஆண்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavaa, Undran Saevaikkatiyaen Arppananj Seyyath Thoontum Un Aavi Arulvaay. Ennaith Thiyaakikka Aevum Un Anal Moottituvaay, Innilam Thannil Maalum Manumakkal Meetpirkaaga. - Aan 1. Pusikkap Pandamillaamal, Poovil Illamumae Anri, Nasinthu Nalinthu Naattil Kasinthu Kanneer Sorinthu Thaesa Mellaam Thiyangkum Naesamakkal Saevaikkae Nimalaa, Enai Aerrukkol. - Aan 2. Varumai Van Katan Viyaathi, Kuruttaattam Katsi Katum Ariveenam Andhakaaram Marul Mooti Makkal Vaatum, Tharunam Ikkaalamathaal, Kurunaathaa Unathanpai Arulvaay, Atiyaenukkae. - Aan 3. Arumai Ratsakaa, Undran Arumpaatu Kanneer Thiyaagam, Paeranpu Paarach Siluvai, Saruvamum Kanda Endran Irudhayam Nainthuruki Verum Paechsaay Ninritaamal Tharunam Enaiyae Thanthaen. - Aan 4. Ulakae Una Thaayinum Thalai Saaykkath Thaavillaamal Nalamae Purinthu Thirinthaay; Ellaam Thuranthu Yaan Un Nallaavi Kontuzhaikka, Vallaa, Unin Siluvai Allaal Vazhi Vaerunto? - Aan