பாடல் #38450
இயேசு இயேசு இயேசு
🔤 Yesu Yesu Yesu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு இயேசு இயேசு எந்தன் ஆசையாவும் இயேசு இயேசு இயேசு இயேசு எந்தன் ஆவல் யாவும் இயேசு எந்தன் மூச்சு இயேசு, எந்தன் பேச்சு இயேசு, எந்தன் மாட்சி இயேசு, என் கண்ணின் காட்சி இயேசு பாவம் போக்கும் இயேசு, பரிசுத்தமாக்கும் இயேசு பாதைகாட்டும் இயேசு, பரலோகம் சேர்க்கும் இயேசு கற்றவர்க்கும் இயேசு, கல்லாதவர்க்கும் இயேசு கல்வாரியில் இயேசு, கடும் பாடுபட்டார் இயேசு ஆதி சபையில் இயேசு, நல் ஆவி அளித்தார் இயேசு ஜோதி சூர்யன் இயேசு, நல் நீதி தேவன் இயேசு துன்பத்திலும் இயேசு, இன்பத்திலும் இயேசு இம்மையிலும் இயேசு, நம் மறுமையிலும் இயேசு போகையிலும் இயேசு, நம் வருகையிலும் இயேசு காத்துகொள்வார் இயேசு, நம்மைப் பார்த்துக் கொள்வார் இயேசு நிந்தையிலும் இயேசு, நம் சிந்தையிலும் இயேசு விந்தையான இயேசு, நம் தந்தையாவார் இயேசு உயர்ந்த தெய்வம் இயேசு, வெகுசிறந்த தெய்வம் இயேசு உயிர்த்தெழுந்த இயேசு, இவர் உலகை வென்ற இயேசு மானிடர்க்காய் இயேசு மண்ணில் வந்த இயேசு மாறிடாத இயேசு, இவர் மகத்துவமான இயேசு இருந்தவரும் இயேசு, இனி இருப்பவரும் இயேசு வந்தவரும் இயேசு, இனி வருபவரும் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Yesu Yesu Endhan Aasaiyaavum Yesu Yesu Yesu Yesu Endhan Aaval Yaavum Yesu Endhan Moochsu Yesu, Endhan Paechsu Yesu, Endhan Maatsi Yesu, En Kannin Kaatsi Yesu Paavam Pokkum Yesu, Parisutthamaakkum Yesu Paathaikaattum Yesu, Paralogam Saerkkum Yesu Kartravarkkum Yesu, Kallaadhavarkkum Yesu Kalvaariyil Yesu, Katum Paatubattaar Yesu Aathi Sapaiyil Yesu, Nal Aavi Alitthaar Yesu Jothi Sooryan Yesu, Nal Neethi Devan Yesu Thunbatthilum Yesu, Inbatthilum Yesu Immaiyilum Yesu, Nam Marumaiyilum Yesu Pokaiyilum Yesu, Nam Varukaiyilum Yesu Kaatthukolvaar Yesu, Nammaip Paartthuk Kolvaar Yesu Ninthaiyilum Yesu, Nam Sinthaiyilum Yesu Vinthaiyaana Yesu, Nam Thanthaiyaavaar Yesu Uyarndha Theyvam Yesu, Vekusirandha Theyvam Yesu Uyirtthezhundha Yesu, Ivar Ulakai Vendra Yesu Maanidarkkaay Yesu Mannil Vandha Yesu Maaritaadha Yesu, Ivar Makatthuvamaana Yesu Irundhavarum Yesu, Ini Iruppavarum Yesu Vandhavarum Yesu, Ini Varubavarum Yesu