பாடல் #38448
பரிசுத்த அக்கினி அனுப்பிடுமே
🔤 Parisuttha Akkini Anuppitumae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த அக்கினி அனுப்பிடுமே பறந்து நாங்கள் உம்மைத் துதித்திடுவோம் குறைவுகள் நீங்க நிறைவான ஆவி விரைவாகத் தாரும் மகிழ்ந்தும்மைப்பாட வாதை நோய் துன்பங்கள் விலகிட செய்யும் பேதமை நீங்க அருள் மழை பெய்யும் ஆதி மெய் அன்பினால் நிறைந்துமே பாட ஜோதி ஆவியில் மகிழ்ந்தும்மில் வாழ ஒன்றிய ஆவியில் ஊன்றி ஜெபிக்க அந்நிய பாஷையில் பேசி மகிழ கறை திரை யாவும் கழுவிட வாரும் திருமறை தியானத்தில் நிலைத்திடகாரும் உடல் பொருள் ஆவி யாவிலும் நாங்கள் திடமனதாக இயேசுவை காட்ட பரிசுத்தர் யாவரும் பரவசமடைய பரிசுத்த ஆவியில் நிறையுமே ஜொலிக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Akkini Anuppitumae Paranthu Naanggal Ummaith Thuthitthituvom Kuraivugal Neengga Niraivaana Aavi Viraivaagath Thaarum Makizhnthummaippaada Vaathai Noy Thunbanggal Vilakida Seyyum Paedhamai Neengga Arul Mazhai Peyyum Aathi Mey Anpinaal Nirainthumae Paada Jothi Aaviyil Makizhnthummil Vaazha Onriya Aaviyil Oonri Jepikka Anniya Paashaiyil Paesi Makizha Karai Thirai Yaavum Kazhuvida Vaarum Thirumarai Thiyaanatthil Nilaitthidakaarum Udal Porul Aavi Yaavilum Naanggal Thidamanathaaga Yesuvai Kaatta Parisutthar Yaavarum Paravasamataiya Parisuttha Aaviyil Niraiyumae Jolikka