பாடல் #38439
லீலியிலும் வெண்மை
🔤 Leeliyilum Venmai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லீலியிலும் வெண்மை லீபனோனின் வலிமை நீர் பாய்ச்சலான தோட்டம் வற்றாத நீர் ஊற்று என் இயேசுவை நீ போற்று உன் இருதயத்தை ஊற்று இனிமையாம் இனிமையாம் இனிமையாம் அவர் நாமம்-2 அஞ்ஞான அகங்கார பேய்பிடித்தவர் அறியாமல் தெரியாமல் மறைந்திருப்பவர் மனந்திரும்பணும் பாவ மன்னிப்பு பெறணும் வருத்தப்பட்டு பாரம் சுமந்து சோர்ந்து போனாரே வலிய கொடிய நோயினால் நொந்து போனாரே இயேசுவிடம் வா அவர் ஆறுதல் அளிப்பார் வேதாளம் பாதாளத்தை வெற்றிசிறந்தவர் வேதனைசோதனையில் பாடுபட்டவர் உன்னையும் அறிவார் உனக்குதவியும் செய்வார் கூன் குருடு செவிடு ஊமை குறைவை நீக்குவார் பேய் பிசாசு கட்டின கட்டையும் அவிழ்ப்பார் உன் பாவம் மன்னிப்பார் பரிசுத்தமாக்குவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Leeliyilum Venmai Leebanonin Valimai Neer Paaycchalaana Thottam Varraadha Neer Oorru En Yesuvai Nee Porru Un Irudhayatthai Oorru Inimaiyaam Inimaiyaam Inimaiyaam Avar Naamam-2 Anjnjaana Agangkaara Paeypititthavar Ariyaamal Theriyaamal Marainthiruppavar Mananthirumbanum Paava Mannippu Peranum Varutthappattu Paaram Sumanthu Sornthu Ponaarae Valiya Kotiya Noyinaal Nonthu Ponaarae Yesuvidam Vaa Avar Aarudhal Alippaar Vaethaalam Paathaalatthai Verrisirandhavar Vaedhanaisodhanaiyil Paatubattavar Unnaiyum Arivaar Unakkudhaviyum Seyvaar Koon Kurutu Sevitu Oomai Kuraivai Neekkuvaar Paey Pisaasu Kattina Kattaiyum Avizhppaar Un Paavam Mannippaar Parisutthamaakkuvaar