பாடல் #38433
மெய்ப்பொருள் அறியா
🔤 Meypporul Ariyaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மெய்ப்பொருள் அறியா மாந்தர் - உலகின் பொய்ப்பொருள் மேல்நாட்டம் ஆகிறார் மெய்யான தேவன் என்றாரே - இயேசு மேன்மை எல்லாம் துறந்தாரே பொன் வெள்ளி பஞ்சலோகமே புகழ் சிற்பாச்சாரி சிலை யாமே உலக புகழ் விலையாமே - அது உனை இரட்சிக்கும் தெய்வமாமோ மையல் மிகுந்து கெடாதே - புவி வாழ்வென்பதும் வெறும் சூதே உள்ளான மனிதனின் தீதே - மாறி மெய் ஞானத்தை தினம் ஒதே எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு எல்லாம் ஒன்றென் றெண்ணாதே உலகில் இயேசு வல்லால் இரட்சிப்பேதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meypporul Ariyaa Maandhar - Ulakin Poypporul Maelnaattam Aakiraar Meyyaana Devan Enraarae - Yesu Maenmai Ellaam Thuranthaarae Pon Velli Panjjalogamae Pugazh Sirpaachsaari Silai Yaamae Ulaka Pugazh Vilaiyaamae - Athu Unai Iratsikkum Theyvamaamo Maiyal Mikunthu Ketaathae - Puvi Vaazhvenbathum Verum Soothae Ullaana Manidhanin Theethae - Maari Mey Njaanatthai Thinam Othae Epporul Yaar Yaar Vaaykkaetpinum Apporul Meypporul Kaanpatharivu Ellaam Onren Rennaathae Ulakil Yesu Vallaal Iratsippaethae