பாடல் #3841
வருவார் விழித்திருங்கள்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
வருவார் விழித்திருங்கள், இயேசுநாதர் வருவார் விழித்திருங்கள் பெரியவர், சிறியவர், பேதையர், மேதையர் சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட - வரு 1. பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க, பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க, தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும் சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திலங்க - வரு 2. வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க, ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க, மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க, ஞான கானம் பாட நல்லோர் சபை தொடங்க. - வரு 3. விசுவாசிகள் தமை மெச்சிப் புகழுதற்கும், மேலா மோட்ச தலத்தோர் சால மகிழுதற்கும், விசுவாச ஈனரை வியவா திகழுதற்கும், விண்ணோர் குழாங்கள் சூழ, அண்ணல் கிறிஸ்தரசர் - வரு