பாடல் #38403
பேரின்பம் பேரின்பம் பேரின்பமே
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
பேரின்பம் பேரின்பம் பேரின்பமே சீயோன் மணாளன் சீக்கிரம் வருவார் அவரை நாம் கண்டு ஆனந்திப்போமே சரணங்கள் பதினாயிரம் பக்தர்கள் சூழ்ந்திட அத்தன் ஆகாய மேகத்தில் வருவார் கோடா கோடி துதிபாட்டாய் பாடி கோமான் மணவாளனில் மகிழ்வோம் இந்த புவியில் நிந்தை அடைந்தோர் சந்தோஷ பேரின்ப கீதங்களால் சொந்த மணாளனின் காந்தங்களாய் வீசி நிந்தை நீங்க துதித்தார்ப்பரிப்போம் ஆயிர வருஷ அரசாட்சியில் அன்பரோடு அரசாட்சி செய்வோம் சஞ்சலம் நீங்க சந்தோஷம்பொங்கி சாட்சி சுவிசேஷ காட்சி அளிப்போம் காளையும் கன்றும் பால சிங்கமும் கர்த்தரின் ஆட்சியில் ஒன்றுக் கூடி மாட்டை போல் வைக்கோலை தின்னுமே மன்னன் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் பூமியில் உறங்கிடும் சுத்தரெல்லாம் முதலில் உயிர்த்தெழுந்திடுவார்கள் மரிக்காத பக்தர்கள் மறுரூபமடைவோம் மன்னனில் மங்களம் பாடி மகிழ்வோம் இரத்தத்தில் மூழ்கிட வந்திடுவீர் சத்தத்தை கேட்டானந்தித்திடுவீர் இரட்சிப்பினுள்ளே நிச்சயம் வந்தால் சிட்சைக்கு உண்மையாய் தப்பிடுவீர்