பாடல் #38402
உனக்கு கொடுக்கும் தேசத்திலே
🔤 Unakku Kotukkum Thaesatthilae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்கு கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பேன் என்றுரைத்த இயேசுவே நீர் என்னை ஆசீர்வதியும் பாலும் தேனும் ஓடும் கானான் தேசம் உனக்கு தருவேன் பக்தரோடு சுத்த கீதம் பாடி மகிழ செய்வேன் என்று வாக்குரைத்த தேவே என்னை ஆசீர்வதியும் (2) மூன்று வருஷம் ஆறு மாதம் வானம் அடைபட்டாலும் முன் தீர்க்கன் எலியா தேவையை நீர் சாரிபாத்தில் அளித்தீர் மாகலசம் எண்ணை கலசம் நிறைய ஆசீர் வதித்தீர் -(2) ஐந்து அப்பம் இரண்டு மீனை எடுத்து ஆசீர்வதித்தீர் ஐயாயிரம் புருஷர் திருப்தியாக புசிக்க கொடுத்தீர் பனிரெண்டு கூடை நிறைய மீதி துணிக்கை எடுத்தீர் - (2) அப்பம் கேட்கும் மகனுக்கு கல்லைக் கொடுப்பதுண்டோ மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுக்கும் தகப்பன் உலகில் உண்டோ நல்ல ஈவை வேண்டிக் கொண்டால் கொடுப்பேன் என்ற தேவே - (2) அனலுமின்றி குளிருமின்றி வெது வெதுப்பாயிருந்தால் வாயினின்று வாந்தி பண்ணி போடுவேன் என்றீரே ஆவியின் நிறைவு அனல் நிலைவரமாய் தாரும்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakku Kotukkum Thaesatthilae Unnai Aaseervathippaen Enruraittha Yesuvae Neer Ennai Aaseervathiyum Paalum Thaenum Otum Kaanaan Thaesam Unakku Tharuvaen Paktharotu Suttha Keedham Paati Makizha Seyvaen Enru Vaakkuraittha Thaevae Ennai Aaseervathiyum (2) Moonru Varusham Aaru Maadham Vaanam Ataibattaalum Mun Theerkkan Eliyaa Thaevaiyai Neer Saaripaatthil Alittheer Maagalasam Ennai Kalasam Niraiya Aaseer Vathittheer -(2) Ainthu Appam Irantu Meenai Etutthu Aaseervathittheer Aiyaayiram Purushar Thirupthiyaaga Pusikka Kotuttheer Panirentu Kootai Niraiya Meethi Thunikkai Etuttheer - (2) Appam Kaetkum Makanukku Kallaik Kotuppathunto Meenaik Kaettaal Paampaik Kotukkum Thakappan Ulakil Unto Nalla Eevai Vaentik Kontaal Kotuppaen Endra Thaevae - (2) Analuminri Kuliruminri Vethu Vethuppaayirunthaal Vaayininru Vaanthi Panni Potuvaen Enreerae Aaviyin Niraivu Anal Nilaivaramaay Thaarum-(2)