பாடல் #38401
தலைமுறை தலைமுறையாக
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
தலைமுறை தலைமுறையாக எங்களுக்கடைக்கலமானவர் தேவே பர்வதங்கள் தோன்றும் முன்னும் பூமி உருவாகு முன்னும் அநாதியாய் என்றென்றுமாய் நீரே தேவனாயிருக்கிறீர் உம் பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்று நாளை போலாகும் அது காலையிலே முளைத்து பூத்து மாலையிலே அறுப்புண்டு போம் எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது அது பெலத்தின் மிகுதியால் எண்பது அதின் மேன்மையானது வருத்தம் சஞ்சலம் கதை போல் கழிந்து போகிறது நாங்கள் ஞான இதயமுள்ளோர் ஆக எங்கள் நாட்களை எண்ண போதித்தருளும் எதுவரைக்கும் கோபம் கொள்வீர் உமதடியார்க்கு தயை செய்வீர் நாங்கள் சிறுமை பட்ட நாட்களுக்கும் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும் உமது கிருபையால் திருப்தியாக்கும் உம் கிரியை உம் ஊழியக்கார்க்கும் உம் மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்கவே எங்கள் கையின் கிரியையை எங்களிடத்தில் உறுதியாக்கும்