பாடல் #3840
வருவாரே தாவீதின் மைந்தர்
🔤 Varuvaarae Thaaveethin Maindhar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வருவாரே! தாவீதின் மைந்தர் வெற்றி வேந்தனானார் வான மேகங்கள் மீது வந்து அரசாட்சி செய்வார். அல்லேலூயா! (2) வரவே வருவார். தாசர் யாவரும் படைசூழ ராஜரீகம் செய்வார். 2. வருவாரே தயாள மீட்பர் பாடுபட்டவரே சர்வ மாட்சிமை மேன்மையோடும் ஆளுவார் என்றுமெ. அல்லேலூயா! (2) வரவே வருவார். தாசர் யாவரும் படைசூழ ராஜரீகம் செய்வார். 3. வருவாரே! மகாதிகாரன் ராஜா வாழ்க என்போம் அருள் ஜோதி ப்ரகாசம் வீச போற்றி வணங்குவோம். அல்லேலூயா! (2) வரவே வருவார். தாசர் யாவரும் படைசூழ ராஜரீகம் செய்வார். 4. வருவாரே சபாதிபதி பக்தர் யாவரையும் நானா திசையினின்று கூட்டிச் சேர்த்து வாழ்விக்கவும். அல்லேலூயா! (2) வரவே வருவார். தாசர் யாவரும் படைசூழ ராஜரீகம் செய்வார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Varuvaarae! Thaaveethin Maindhar Verri Vaendhanaanaar Vaana Maeganggal Meethu Vanthu Arasaatsi Seyvaar. Allaelooyaa! (2) Varavae Varuvaar. Thaasar Yaavarum Pataisoozha Raajareegam Seyvaar. 2. Varuvaarae Thayaala Meetpar Paatubattavarae Sarva Maatsimai Maenmaiyotum Aaluvaar Enrume. Allaelooyaa! (2) Varavae Varuvaar. Thaasar Yaavarum Pataisoozha Raajareegam Seyvaar. 3. Varuvaarae! Makaathikaaran Raajaa Vaazhka Enpom Arul Jothi Prakaasam Veesa Porri Vanangkuvom. Allaelooyaa! (2) Varavae Varuvaar. Thaasar Yaavarum Pataisoozha Raajareegam Seyvaar. 4. Varuvaarae Sapaathibathi Pakthar Yaavaraiyum Naanaa Thisaiyininru Koottich Saertthu Vaazhvikkavum. Allaelooyaa! (2) Varavae Varuvaar. Thaasar Yaavarum Pataisoozha Raajareegam Seyvaar.