பாடல் #38395
சுந்தர சோபிதர் நிந்தைகள்
🔤 Sundhara Sopidhar Ninthaigal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுந்தர சோபிதர் நிந்தைகள் நீங்கிட கந்தை அணிய வந்தோனே - மெய் கர்த்தத்துவம் தோளில் சுமந்த விண்தேனே இராக்காலம் மாறிட விடிவெள்ளி தோன்றிட மகத்துவ மார்பில் சாய்ந்து மாசில்லா தேவனோடே வனாந்திரத்தில் வரும் இவள் யார்? இவள் யார்? சந்திரன் போல் அழகும் சூரியன் போல் ஒளியும் கொடிகள் பறக்கும் படை போல் கெடியுள்ளவளாய் அருணோதயம் போல் உதிக்கும் இவள் யார்? இவள் யார் ? அலைகள் மோதிட புயல் ஓங்கி வீசிட கப்பல் கவிழும்போது கதறும் சீஷரைக் கண்டு அமைதலாயிரு என்ற இவர் யார்? இவர் யார்? அசுத்தாவிகளுக்கு அதிகாரத்தோடே கட்டளையிட அவை கீழ்படிகிறதே இவ்வதிகாரம் பெற்ற இவர் யார்? இவர் யார்?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sundhara Sopidhar Ninthaigal Neengkida Kanthai Aniya Vanthonae - Mey Kartthatthuvam Tholil Sumandha Vinthaenae Iraakkaalam Maarida Vitivelli Thonrida Makatthuva Maarpil Saaynthu Maasillaa Devanotae Vanaanthiratthil Varum Ival Yaar? Ival Yaar? Santhiran Pol Azhakum Sooriyan Pol Oliyum Kotigal Parakkum Patai Pol Ketiyullavalaay Arunodhayam Pol Uthikkum Ival Yaar? Ival Yaar ? Alaigal Mothida Puyal Ongki Veesida Kappal Kavizhumpothu Katharum Seesharaik Kantu Amaidhalaayiru Endra Ivar Yaar? Ivar Yaar? Asutthaavigalukku Athikaaratthotae Kattalaiyida Avai Keezhpatikirathae Ivvathikaaram Pertra Ivar Yaar? Ivar Yaar?